தனித்துப் போட்டி முடிவை விஜயகாந்த் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் திடீர் கோரிக்கை
சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி என்ற முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மக்கள் நலக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திடீரென வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக தங்களது கூட்டணிக்கு வர வேண்டும் என்று திமுக, பாஜக மற்றும் மக்கள் நலக் கூட்டணி ஆகியவை தொடர்ந்து அழைப்பு விடுத்தன. இந்நிலையில் தனித்துப் போட்டி; தமது தலைமையில் ஒரு அணி என்ற முழக்கத்தை முன்வைத்தார் விஜயகாந்த்.

இதனை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருந்தார். மேலும் விஜயகாந்த் வெளிப்படையாக மக்கள் நலக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால் பரிசீலிப்போம் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனித்துப் போட்டி என்ற முடிவை விஜயகாந்த் மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணையவேண்டும். அப்படி விஜயகாந்த் இணைந்தால் அவரது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.
அத்துடன் பாரதிய ஜனதா கட்சியுடன் எந்த உடன்பாடும் இல்லை என்பதையும் தேமுதிக தெளிவுபடுத்த வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications