சார் உங்க கூட ஒரு போட்டோ…. ரசிகைகளின் ஆசையை நிறைவேற்றிய விஜயகாந்த்
என்னதான் கோபக்காரர்... சட்டென்று கோபம் வந்தால் அடித்து விடுவார் என்றெல்லாம் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சொல்கின்றனர். சமூக வலைத்தளங்களில் விஜயகாந்தை காமெடி பீஸ் ஆக கூட சித்தரிக்கின்றனர். ஆனாலும் விஜயகாந்த் என்றாலே பெண்கள் மத்தியில் ஒரு தனி இமேஜ் இருக்கத்தான் செய்கிறது.
விஜயகாந்திடம் எந்த வித அச்சமும் இன்றி எளிதில் நெருங்கி பேசலாம் என்ற இமேஜ் பெண்கள் மத்தியில் உள்ளது. அதனால்தான் சில தினங்களுக்கு முன்னர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வந்த விஜயகாந்திடம் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பேசினர். சிலர் அவரது அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மெட்ரோ ரயிலிலும் பெண்கள் ஆர்வத்துடன் விஜயகாந்தின் அருகில் அமர்ந்து பயணம் செய்தனர்.
பெண்கள், தாய்மார்கள் மத்தியில் குறிப்பாக கிராமத்து பகுதிகளில் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக ஒரு நல்ல இமேஜ் விஜயகாந்துக்கு உண்டு. நடிகர் விஜயகாந்த் அரசியல்வாதியாக மாறியதும் இந்த இமேஜை நம்பித்தான்.

பெண்களிடம் இமேஜ்
பிரேமலதாவை திருமணம் செய்யும் முன்னர் விஜயகாந்த் பற்றிய கிசுகிசுக்கள் வந்திருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் விஜயகாந்த் பற்றி எந்த ஒரு கிசுகிசுவும் வந்ததாக தெரியவில்லை. அதனால்தான் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய இமேஜ் விஜயகாந்திற்கு இன்னமும் உள்ளது.

காமெடி கலாட்டா
விஜயகாந்த் அரசியல்வாதியாக மாறிய பின்னர் அவரது இமேஜை மக்கள் மத்தியில் டேமேஜ் செய்யவேண்டும் என்ற நோக்கத்திலேயே வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டரில் செய்திகள் பரப்பப்படுகின்றனர்.

குடிகாரர் இமேஜ்
விஜயகாந்த் ஒரு குடிகாரர் என்கிற ரீதியில்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தனர். அதுவும் தூள் தூளானது. அப்படி பிரச்சாரம் செய்த நடிகர் சிலகாலம் காணாமலேயே போயிருந்தார்.

மோடி கருத்து
"சமூக வலைத்தளங்களில் நான் வாங்கிய திட்டுகள் ஏராளம். ஆனாலும், என்னை திட்டுபவர்களை நான் முடக்கியது கிடையாது" என்று பிரதமர் நரேந்திர மோடியே சமீபத்தில் கூறியுள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால் விஜயகாந்த் வாங்கிய திட்டுக்களைப் பார்த்தால் விஜயகாந்த் வாங்கிய திட்டுக்கள் குறைவாகத்தான் இருக்கும்.

கை ஓங்கிய விஜயகாந்த்
விஜயகாந்த் பத்து நிமிடம் ஒரு விழாவில் பங்கேற்கிறார் என்றாலே அவர் 9 நிமிடம் செய்த நல்ல செயல்களை விட ஒரு நிமிடம் கொஞ்சம் நாக்கை துருத்தி கோபமாக பேசும் பேச்சுதான் லைம் லைட்டில் வரும். அதைத்தான் ப்ளாஷ் நியூஸ் ஆக ஒளிபரப்புகின்றனர். நல்ல நேரம் கோயம்பேடு ரயில் நிலையத்தில் தன்னுடைய உதவியாளரை கோபித்துக் கொண்டு விஜயகாந்த் சட்டென்று அடிக்கப்போனது பெரிய செய்தியாகவில்லை.

சிக்கிய ஸ்டாலின்
அதற்குப் பதிலாக அன்றைக்கு டுவிட்டரில் வறுபட்டது ஸ்டாலின்தான். அடிவாங்கிய நபரே ஸ்டாலின் அங்கிள் என்னை அடிக்கவேயில்லை என்று பேட்டி கொடுக்கும் அளவிற்கு போனது. இந்த ஐடியா விஜயகாந்திற்கு இல்லாமல் போய்விட்டதே... இது தெரிந்திருந்தால் முதல்முதலாக குட்டு வாங்கிய வேட்பாளரை அழைத்து பேட்டி கொடுக்க வைத்திருப்பாரே விஜயகாந்த்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications