ஜெ. படம் கிழிப்பு விவகாரம்: கைதிலிருந்து தப்பினார் விஜயகாந்த்! ஜன. 5 வரை கைது செய்ய இடைக்கால தடை!!
மதுரை: தஞ்சாவூரில் பேருந்து நிழற்குடையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழித்தெறிய உத்தரவிட்ட விவகாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஜனவரி 5-ந் தேதி வரை கைது செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் ஜனவரி 5-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தஞ்சாவூரில் நேற்று டெல்டா விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் பேசிக் கொண்டிருந்த மேடைக்கு எதிரே பேருந்து நிழற்குடையில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்து ஆத்திரப்பட்ட விஜயகாந்த் அதனைக் கிழிக்குமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டார். தேமுதிகவினரும் உடனே ஜெயலலிதா படத்தை கிழித்தனர்.
இதனால் கொந்தளித்துப் போன அதிமுகவினர் விஜயகாந்த் கொடும்பாவியை எரித்தனர். இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ. ரெங்கசாமி, தஞ்சை மாநகராட்சி ஆணையர் குமார் ஆகியோர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது "பொதுச்சொத்துக்கு" சேதம் விளைவித்ததாக தஞ்சாவூர் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் 13 தேமுதிகவினரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதால் அதிமுகவினர் விஜயகாந்த் கொடும்பாவி எரிக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
சட்டம் தன் கடமையை செய்யும் என முதல்வர் கூறியிருப்பதால் எங்கே தாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவோமோ என அஞ்சி உடனேயே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அவசரம் அவசரமாக முன் ஜாமீன் மனு ஒன்றை விஜயகாந்த் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மனு மீது ஜனவரி 5-ந் தேதிக்குள் பதிலளிக்க தஞ்சை கிழக்கு காவல்நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. மேலும் ஜனவரி 5-ந் தேதி வரை விஜயகாந்த்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்தும் நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவிட்டார்.
இதனால் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக தப்பியுள்ளார் விஜயகாந்த்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications