காவிரி: அடித்துக் கொள்ளும் கர்நாடகா- தமிழகம்... இது இந்தியாவா? வேற நாடா? விஜயகாந்த் ஆவேசம் #cauvery
ஆத்தூர்: காவிரி பிரச்சனையில் கர்நாடகாவும் தமிழகமும் அடித்துக் கொள்ளக் கூடாது; இது இந்தியாவா? வேற நாடா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் ஆத்தூரில் நேற்று தேமுதிக சார்பில் பக்ரீத் பெருநாள் குர்பானி வழங்கும் விழா மற்றும் கட்சியின் 12-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

பல ஆண்டு பிரச்சனை
கர்நாடகா- தமிழகம் இடையே காவிரி பிரச்சினை பல ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. இங்கு மாறி மாறி ஆட்சி செய்யும் அதிமுகவும் திமுகவும் காவிரி நீரை கொண்டுவருகிறோம் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன.

ஜூலை, ஆகஸ்ட்னா....
ஆனால், ஜூலை, ஆகஸ்ட் வந்தாலே சம்பா சாகுபடிக்கு நீல் இல்லை என்று பிரச்சினை வந்துவிடுகிறது. மழை பெய்ய ஆரம்பித்ததும் பிரச்சினை மறக்கப்படுகிறது.

மாநிலங்களுக்குள் இருக்கும் பிரச்சனை
நைல் நதி நீரை 3 நாடுகள் பிரச்சினையின்றி பங்கிட்டுக் கொள்கின்றன. காவிரி விவகாரம் தமிழகம்- கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினை. ஒரே நாளில் 40,50 பஸ்களை எரிக்கிறார்கள்.

இந்தியாவா? வெளிநாடா?
ஏன் இப்படி? இது அண்ணன், தம்பி பிரச்சினை. இது இந்தியாவா? வெளிநாடா? ராமநாதபுரம் மீனவர்கள்னா இரு நாட்டு பிரச்சனைன்னு சொல்லலாம்...
ஒற்றுமையாக இருப்போம்
காவிரி நீரை பங்கிட்டுக்கொள்வதில் நமக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை வெளிநாட்டினர் பார்த்தால் இந்தியாவைப் பற்றி என்ன நினைப்பார்கள். வேற்றுமைகளை மறந்து நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications