"கீழே" போய் விட்ட தேமுதிகவை "மேலே" கொண்டு போக விஜயகாந்த் செம ஐடியா!
சென்னை: எத்தைத் தின்றால் பித்தம் கழியும் என்ற நிலையில் தேமுதிக உள்ளது. சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி வாங்கிய அடியை யாருமே மறக்க முடியவில்லை. மேலும் கட்சியும் தாறுமாறாக பிளந்து போய் விட்டது. இந்த நிலையில் ஜோதிடத்தில் பெரும் நம்பிக்கை வைத்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சி அலுவலகத்தை மாற்றும் முடிவில் இருப்பதாக ஒரு செய்தி ஓட ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே கட்சியை பாஜகவுடன் போய் இணைத்து விட விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தி ஓடிக் கொண்டுள்ளது. அந்த செய்தியுடன் தற்போது கட்சி தலைமை அலுவலகத்தை (அதாவது முன்னாள் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம்) மாற்றி விட அவர் முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி சேர்ந்துள்ளது.
தற்போதுள்ள தலைமை அலுவலகத்தை அப்படியே வணிக வளாகமாக மாற்றும் திட்டத்தில் விஜயகாந்த் உள்ளதாகவும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.

வாஸ்து சரியில்லை பாஸு
இப்படியொரு முடிவுக்கு விஜயகாந்த் வர முக்கியக் காரணம்.. வாஸ்து பிரச்சினைதான் என்றும் சொல்கிறார்கள். அதாவது இந்த அலுவலகத்தில் வாஸ்து சரியில்லை என்று யாரோ கொளுத்திப் போட்டுள்ளனர். எனவேதான் கட்சி அலுவலகத்தை மாற்றும் முடிவுக்கு விஜயகாந்த் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எதுவுமே சரியில்லை
மேலும் கட்சி அலுவலகத்தில் வைத்துத்தான் பல முக்கிய முடிவுகளை எடுத்தேன். ஆனால் எதுவுமே எனக்கு சாதகமாக வரவில்லை. எனவே வாஸ்து பிரச்சினையால்தான் குழப்பம் என கருதுகிறேன் என கட்சியின் முக்கியஸ்தர்களிடம் கூறினாராம் விஜயகாந்த்.

கீழே வேண்டாம்.. மேலே போ!
தற்போது இந்த இடத்தை காலி செய்து விட்டு இதை பிரமாண்டமான வணிக வளாகமாக அதாவது மாலாக மாற்ற விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வணிக வளாகத்தின் மேற்பகுதியில் கட்சியின் அலுவலகத்தை அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம். அதாவது தற்போது "கீழே" போய் விட்ட தேமுதிக.. வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு "மேலே" போகப் போகிறது!

வாயும் சரியில்லையே!
வாஸ்து சரியில்லை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. தேர்தல் சமயத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பிரசாரச் சமயத்தில் விஜயகாந்த்தின் "வாய்" சரியில்லையே என்பதை யாராவது அவர்களிடம் எடுத்துச் சொன்னார்களா என்று தெரியவில்லையே!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications