முன்வாசல் வழியாக மும்பை சென்று பின்வாசல் வழியாக சென்னை திரும்பிய விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்பையில் நடந்த பேட்மிண்டன் தொடரில் கலந்து கொள்வதற்காகப் போயிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். அவர் வரும் வழியில் செய்தியாளர்கள் பெருமளவில் குவிந்திருந்ததால் அவர்களைப் பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டு வேறு வாசல் வழியாக அவர் வெளியேறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் இப்போது கிட்டத்தட்ட அத்தனை விளாயாட்டுக்களுக்கும் ஒரு பிரீமியர் லீக் போட்டி இந்தியாவில் வந்து விட்டது. கால்பந்து, டென்னிஸ், பேட்மிண்டன் என கலக்க ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் பேட்மிண்டன் பிரீமியர் லீக் போட்டிகள் தற்போது தொடங்கி நடந்து வருகின்றன. இதில் முக்கியமான அணியாக சென்னை ஸ்மாஷர்ஸ் விளங்குகிறது. காரணம், இந்த அணியின் உரிமையாளர் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன்.

தொடக்க விழாவில் விஜயகாந்த்

தொடக்க விழாவில் விஜயகாந்த்

இந்தத் தொடரின் தொடக்க விழா ஜனவரி 2ம் தேதி மும்பையில் நடந்தது. இதில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார். கூடவே மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

3ம் தேதி போட்டியில் அசத்திய சென்னை

3ம் தேதி போட்டியில் அசத்திய சென்னை

3ம் தேதி நடந்த போட்டியில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி, மும்பை ராக்கெட்ஸ் அணியை வீழ்த்தியது. போட்டி முடிவில் விஜயகாந்த்தைப் பரிசளிக்க அளித்தனர். இதையடுத்து தனது மனைவியுடன் விஜயகாந்த் கலந்து கொண்டு பரிசுகளை அளித்தார்.

வேட்டி சட்டையில்

வேட்டி சட்டையில்

வழக்கமாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற போட்டிகளின் போது டக்கென வெள்ளைக்கார பிரபுக்களாக மாறி நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் விஜயகாந்த் இயல்பாக இருந்தார். வழக்கம் போல வேட்டி சட்டையில் கலந்து கொண்டார். பிரேமலதாவும் சேலையில் ஜொலித்தார். இது அப்படியே வைரல் ஆகி விட்டது.

சென்னை திரும்பினார்

சென்னை திரும்பினார்

இப்படியாக தனது மும்பை பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட விஜயகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் தேமுதிக நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். அதேசமயம், செய்தியாளர்கள் கூட்டமாக காத்திருந்ததால் அந்தப் பாதை வழியாக வராமல் வேறு பாதையில் புகுந்து காரில் ஏறி போய் விட்டார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+