விஜயராஜ் என்கிற விஜயகாந்த்தாகிய நான்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக இணையதளத்தைத் திறந்தால் அதில் கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் விதம் விதமான லேட்டஸ்ட் புகைப்படங்களுடன், விஜயகாந்த்தின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ள பக்கம் நம்மை வரவேற்கிறது.

அந்தப் பக்கத்தில் விஜயகாந்த்தின் இயற் பெயர் முதல் அவர் கேப்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமியை நடத்துவது வரை அனைத்துத் தகவல்களையும் போட்டு வைத்துள்ளனர்.

வாட்ஸ்ஆப்பிலும், பேஸ்புக்கிலும் சமீப காலமாக விஜயகாந்த் யார் என்று தெரியுமா என்று கூறி ஒரு பெரிய பட்டியல் வலம் வந்து கொண்டுள்ளது. இது அதை விட சற்றுப் பெரிதாகவே உள்ளது.

விஜயராஜ் என்னும் இயற்பெயர் கொண்ட விஜயகாந்த்

விஜயராஜ் என்னும் இயற்பெயர் கொண்ட விஜயகாந்த்

விஜயராஜ் என்னும் இயற்பெயர்கொண்ட விஜயகாந்த் என்று ஆரம்பித்து அந்த வாழ்க்கை வரலாறு தொடங்குகிறது. 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் நாள், மதுரை மாவட்டத்திலுள்ள "திருமங்கலம்" என்ற இடத்தில் கே.என். அழகர்சாமி, ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் என்று அது கூறுகிறது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய பள்ளிப்படிப்பை தேவகோட்டையிலுள்ள ‘தி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும்', மதுரையிலுள்ள ‘நாடார் உயர்நிலைப் பள்ளியிலும்' பயின்றார். இளம் வயதிலேயே சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால், படிப்பில் அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. இதனால் தன்னுடைய படிப்பை, பத்தாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, அப்பா பார்த்து வந்த அரிசி ஆலை நிர்வாகத்தை சிறிதுகாலம் கவனித்து வந்தார்.

கண்ணுக்குள் தீத்துளி!

கண்ணுக்குள் தீத்துளி!

படிப்பை விடவும் விளையாட்டிலேயே அதிக ஆர்வமாக இருந்தார். அப்போது தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் கண்ணுக்குள் தீத்துளியாய் தூறியதால் இதயம் நெருப்புப் பையாய் மாறியது தீவிரமாக நடைபெற்றதால் அதனால் ஈர்க்கப்பட்டு இந்தியை எதிர்த்தார். எனவேதான் இறுதிவரை தமிழ் தவிர பிற மொழிப்படங்களில் நடிப்பதில்லை என்று உறுதியாய் இருந்தார். பள்ளிப்பருவத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களை அதிகம் பார்த்ததினால் வள்ளல் குணம் அவருக்குள் வளர்ந்து விட்டது.

இனிக்கும் இளமை

இனிக்கும் இளமை

1978-ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் தி. நகரில் உள்ள ரோகினி லாட்ஜில் தான் ஆரம்ப காலத்தில் தங்கினார். 1978 ஆம் ஆண்டு இயக்குனர் M.A. காஜா அவர்களின் "இனிக்கும் இளமை" என்ற திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க வைத்தார். விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என மாற்றினார். 1978 ஆம் ஆண்டு தென் இந்திய தலைமை ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. 1980-ஆம் ஆண்டு அகில இந்திய தலைமை ரசிகர்மன்றமாக மாற்றப்பட்டது. 1982 ஆம் ஆண்டு "தமிழ்நாடு விஜயகாந்த் தலமை ரசிகர் மன்றம்" பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ரசிகர் மன்ற பொதுச்செயலாளராக ராமு வசந்தன் அவர்கள் இருந்து வந்தார். திரையுலகில் விஜி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

புரட்சிக் கலைஞர் பட்டம்

புரட்சிக் கலைஞர் பட்டம்

1982 ம் ஆண்டு தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!! என்ற முழக்கத்துடன் "தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர்மன்றம்" பெயர் மாற்றம் செய்யப்பட்டது, இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற கொள்கையுடன் ரசிகர் மன்றம் சார்பில் ஏழைகளுக்கு நலத்துட்ட உதவிகள் செய்யப்பட்டது. மன்ற திறப்பு விழா என்றாலே உதவி செய்யும் விழாவாக மாறியது. 1985 ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் புரட்சிக்கலைஞர் என அழைக்கப்பட்டார்.

கேப்டன் எனப் பெயர் வரக் காரணம்

கேப்டன் எனப் பெயர் வரக் காரணம்

‘வைதேகி காத்திருந்தாள்', ‘அம்மன் கோயில் கிழக்காலே', ‘சத்ரியன்', ‘புலன் விசாரணை' போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த அவர், 1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்' என்ற திரைபடத்தில் நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்த இதில், ஒரு காட்டிலாக்கா அதிகாரியாக நடித்து, பேரும் புகழும் பெற்றதால், இவர் மக்களாலும், திரையுலகத்தினராலும் "கேப்டன்" என்று அழைக்கப்பட்டார்.

ஈழத்திற்காக சிம்மக்குரல்

ஈழத்திற்காக சிம்மக்குரல்

1984-ல் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து நடிகர் நடிகைகளுடன் "ஈழ படுகொலையை" நிறுத்திட தமிழக ஆளுனருக்கு மனு கொடுத்தார். 1986 ம் ஆண்டு ஈழப்படுகொலைகளை நிறுத்தக்கோரி தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது, புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் சென்னை வட்டாச்யர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் மேற்கொண்டார், 1989 ம் ஆண்டு மண்டபம் அகதிகள் முகாமுக்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை

1990 ஆம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி L.C.கண்ணையா அம்சவேணி அவர்களின் மகளான பிரேமலதா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு, விஜய் பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர். ஈழ விடுதலைக்காக போராடிய போராளி பிரபாகரன் மேல் உள்ள பற்றால் தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்றும், முருகன் மேல் உள்ள பற்றாலும் தாம் பிறந்த மதுரை மண் மீது உள்ள பற்றாலும் இளைய மகனுக்கு சண்முகபாண்டியன் என பெயர் சூட்டினார்.

நடிகர் சங்கம்

நடிகர் சங்கம்

1999 முதல் 2004 வரை கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக செயல்பட்டார். நடிகர் சங்க தலைவராக பதவியேற்றவுடன் அனைத்து நடிகர்களையும் ஒன்றினைத்து மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி நெடுங்காலமாக கடனில் இருந்த நடிகர் சங்க கடனை அடைத்தார். நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவிகள் மற்றும் ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார். 2002 ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சனைக்காக அனைத்து நடிகர்களையும் ஒன்றினைத்து நமக்கு சேரவேண்டிய தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு மின்சாரம் தரக்கூடாது என நெய்வேலியில் போராட்டம் நடத்தப்பட்டது.

மன்றக்கொடி அறிமுகம்

மன்றக்கொடி அறிமுகம்

2000 ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தனது ரசிகர் மன்றத்திற்கு என கொடியை அறிமுகம் செய்தார். சிகப்பு: (ஆற்றல்) நம் அனைவரின் ரத்தமும் ஒரே நிறம் என்பதை குறிக்கும். மஞ்சள்: அன்பு, அறம், ஆன்மீகம், அமைதி ஆகியவற்றை குறிக்கும். கருப்பு: மக்கள் வாழ்விலுள்ள இருளை குறிக்கும். நடுவில் தீபம் ஏந்திய கை: மக்கள் வாழ்வில் உள்ள இருளை போக்கும் "புரட்சி தீபம்" என்பனவற்றை மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.

கட்சி துவங்குவதாக அறிவிப்பு

கட்சி துவங்குவதாக அறிவிப்பு

2005 ம் ஆண்டு கட்சி துவங்குவேன் என்று திருவண்ணாமலையில் விஜயகாந்த் அறிவித்தார். அதே ஆண்டு ஈரோடு வ.உ.சி. பூங்கா திடலில் வெள்ளக்கோவிலில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நகரில் நடந்த 150 ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கும் விழாவில் மாநாட்டு தேதி மற்றும் இடத்தை விஜயகாந்த் அறிவித்தார். மதுரை மாநகரை அடுத்த திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகரில் 150 ஏக்கர் பரப்பளவில் 2005 ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி மாநாடு நடைபெற்றது. பல லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் ஜானகி ராமச்சந்திரன் அவர்களால் விஜயகாந்திற்க்கு வழங்கப்பட்ட புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில் மாநாட்டு திடலுக்கு வந்தார்.

விஜயகாந்த்தின் முதல் அரசியல் பேச்சு

விஜயகாந்த்தின் முதல் அரசியல் பேச்சு

அந்த கட்சித் தொடக்க விழாவில் விஜயகாந்த் பேசியதுதான் அவரது முதல் அரசியல் பேச்சாகும். அது... நான் முன்பு உங்களிடம், எல்லோருமே நம்மை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று கூறினேன். அதேபோல் எல்லோரும் திரும்பிப் பார்க்கக்கூடிய அளவுக்கு இங்க வந்து இருக்கிறீர்கள். நான் இங்கு உள்ளவர்களிடம் இந்த பந்தலை விரிவுபடுத்த முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இதுவரையில் இப்படி ஒரு பிரம்மாண்டமான மாநாட்டை பார்த்ததில்லை. இரண்டரை லட்சம் பேர் உட்காரலாம் என்றார்கள். வெளியேயும் லட்சக்கணக்கானோர் உள்ளனர்.

நாம் யார், எப்படிப்பட்டவர்கள்?

நாம் யார், எப்படிப்பட்டவர்கள்?

நாம் யார் எப்படிப்பட்டவர்கள்? என்று தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் இந்திய நாட்டிற்கே தெரியப்படுத்த வேண்டும். இதுதான் இந்த மாநாடு. கட்சிக்கு பெயர் வைப்பது குறித்து நானும் எனது மனைவியும் கலந்து பேசினோம். இரண்டு, மூன்று மாதங்களாக பல பெயர்களை எழுதிப் பார்த்தேன். குழப்பமாக இருந்தது. உண்மையிலே சொல்லப்போனால் நேற்று இரவு தான் பெயரை முடிவு செய்தேன். அது என்னவோ தெரியவில்லை. கடவுளின் கருணையாலும் உங்களது ஆசியினாலும் நடந்துள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழகம்

தேசிய முற்போக்கு திராவிட கழகம்

மதுரையை ஆளும் சிவபெருமான், மீனாட்சி, திரும்பரங்குன்றம் முருகன், எனது குலதெய்வம் அருளாளும், உங்களது ஆசியினாலும், இன்று முதல் நமது கட்சியின் பெயர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அழைக்கப்படும். திராவிடம் என்றால் தமிழ் மட்டும்தான் என்று எத்தனையோ பேர் நினைக்கிறார்கள். நாலு மொழிகள் சேரந்துதான் திராவிடநாடு. திராவிடநாடு தேசியத்துக்குள் அங்கம் வகிக்க வேண்டும் என்பதால் தேசியத்தை சேர்த்து உள்ளோம். இந்திய நாடு ஒற்றுமையாக இருக்க தேசியம் அவசியம்.

முற்போக்கு என்ற வார்த்தை ஏன்?

முற்போக்கு என்ற வார்த்தை ஏன்?

முற்போக்கு என்ற வார்த்தை ஏன்? முற்போக்கு என்பதற்கு காரணம் இன்னும் கல்வி, பொருளாதாரம் போன்ற பல விஷயங்களில் பின்தங்கியே இருக்கிறோம். இந்த நிலை மாற முற்போக்குத்தனமான கொள்கைகள் இருக்க வேண்டும். சிந்தனைகள் வளரவேண்டும் என்பதற்காக முற்போக்கு என்ற வார்த்தையை சேர்த்து உள்ளோம். எந்த அளவிற்கு இந்த பெயர் பிரபலம் அடையும்?

நான் நம்பி இருப்பது மக்களைத்தான்.

நான் நம்பி இருப்பது மக்களைத்தான்.

நிச்சயமாக பிரபலம் அடையும். அது உங்களால் முடியும். நீங்கள் இருக்கிறீர்கள். நான் நம்பி இருப்பது மக்களைத்தான். எப்படி மன்றக் கொடி 5 ஆண்டுகளில் பிரபலம் அடைந்ததோ அதுபோல் கட்சியின் பெயர் 6 மாதக்காலத்தில் பிரபலம் அடையும். 90 சதவீத மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பெண்களின் வாக்குகள்

பெண்களின் வாக்குகள்

50 சதவீத ஓட்டுக்கள் பெண்களிடம் உள்ளது என்பதும் எனக்கு தெரியும். பெயருக்கு ஏற்றார் போல் கட்சியின் செயல்பாடுகள் அமையும். மற்றவர்களைப் போன்று இரண்டு மூன்று நாள் மாநாடு நடத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் எனது தொண்டர்கள் யாரும் பணக்காரர்கள் அல்ல. ஏழைகள்தான். அதனால்தான் ஒருநாள் மாநாடு நடத்துகிறேன். உங்கள் சக்தி அனைவருக்கும் தெரிய வேண்டும். சிறுசிறு தவறுகள் இருக்கலாம். அது எல்லோரிடமும் இருக்கும். ஆனாலும் எனது தொண்டர்கள் ராணுவத்தைப் போன்றவர்கள் என்றார் அவர்.

"கேப்டனின்" விளையாட்டு!

இப்படியாகச் செல்லும் அந்த வாக்கை வரலாறு கடைசியில், விளையாட்டின் மேல் அதிக ஈடுபாடுள்ள "கேப்டன்" விஜயகாந்த் அவர்கள் Captain Sports Academy என்ற அமைப்பை ஏற்படுத்தி 1996 முதல் விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறார் என்று விளையாட்டுச் செய்தியுடன் முடிவடைந்துள்ளது.

கண்ணைக் கவரும் புகைப்படங்கள்

கண்ணைக் கவரும் புகைப்படங்கள்

இந்தப் பக்கத்தில் விஜயகாந்த்தை வைத்து போட்டோஷூட் நடத்தி லேட்டஸ்ட் புகைப்படங்களைப் போட்டுள்ள்ளனர். வெள்ளை வேட்டிச் சட்டை,காக்கி டிரஸ், கண்ணை மூடி, கோபமாகப் பார்த்து, சிரித்து,முறைத்து என விதம் விதமாக காணப்படுகிறார் விஜயகாந்த்.

மொத்தம் 4 கலர்களில்

மொத்தம் 4 கலர்களில்

வெள்ளை வேட்டி சட்டை, காக்கிச் சட்டை பேன்ட், கருப்பு பேன்ட் மஞ்சள் சட்டை என மொத்தம் நான்கு வித நிறங்களில் உடை அணிந்து அசத்தியுள்ளார் விஜயகாந்த். விதம் விதமான போஸ்களில் காணப்படும் அவர் நிச்சயம் தேமுதிகவினருக்கு உத்வேகமாக இருப்பார் என நம்பலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+