நீ கரண்ட் பாக்ஸில் கைய விடுயா நத்தம்... நீ எல்லாம் ஒரு அமைச்சரா?: மதுரையில் கொந்தளித்த விஜயகாந்த்
நீ கரண்ட் பாக்ஸில் கைய விடுயா நத்தம்... நீ எல்லாம் ஒரு அமைச்சரா?: மதுரையில் கொந்தளித்த விஜயகாந்த்
மதுரை: மின்வெட்டு பற்றி பேசினால் மின்சார பாக்ஸில் கையை வைத்துப் பார்க்க சொல்வதா? என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை அருகே உள்ள பாசிங்காபுரத்தில் நேற்று இரவு தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற உதவிகள் வழங்கும் விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:
மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு தமிழக அரசு தேவையற்ற இடையூறுகளை தருகிறது.

மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராத மதுரை மாநகராட்சிக்கு, தமிழக அரசு விருது வழங்கி உள்ளது. தமிழகத்தில் குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த நேரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தேவையா?
உலக முதலீட்டாளர் மாநாட்டை ஏன் நடத்துகிறீங்க? குடிக்க தண்ணீர் இல்லைங்கிறீங்க... கரண்ட் இல்லைங்கிறீங்க?

அதிலயும் அமைச்சர் சொல்றாரு.. வானத்தில் மின்வெட்டு இருக்கலாம்.. தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்காது.. என்கிறார்
இல்லைன்னா கரண்ட் பாக்ஸில் கைய விட்டு பாரு என்கிறார்... நீ கைய விட்டு பாருய்யா நத்தம்...அப்பதான் தெரியும்..
யாரைப் பார்த்து கரண்ட்டுக்குள் கைய விட சொல்ற... என் மக்களைப் பார்த்து நீ என்னய்யா கரண்ட்டுக்குள்ள கைய விட சொல்ற.. இதை சொல்றதுக்கு நீ ஒரு அமைச்சரா?
இதை சொல்றதுக்கு நீ ஒரு அமைச்சரா?.. நீ அமைச்சராக இல்லை...
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications