கருத்துக் கணிப்பிலும் திமுக- அதிமுக மீடியாவோட கூட்டணி வச்சிருக்காங்க!- விஜயகாந்த்
சென்னை: கருத்துக் கணிப்பு வெளியிடுவதிலும் திமுக, அதிமுக கட்சிகள் ஊடகங்களுடன் கூட்டணி வைத்திருக்கின்றன என்று குற்றம்சாட்டினார் விஜயகாந்த்.
மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தமது அணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னை விருகம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "விருகம்பாக்கம் என்னுடைய பகுதி. இங்கு பல முறை வந்துள்ளேன். அண்மையில், வெள்ள பாதிப்பின்போது இந்தப் பகுதிக்கு நான் மட்டுமே வந்தேன். ஆனால் அதிமுக, திமுக நிர்வாகிகள் யாரும் வரவில்லை.

இந்த தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போர். நாங்கள் ஆறுமுகம். எங்களுக்கு எப்போதுமே ஏறுமுகம்தான். திராவிடக் கட்சிகள் தேமுதிக தேர்தல் அறிக்கையை காப்பியடிக்கின்றன. பல ஆண்டுகளாக இதைத்தான் செய்கின்றன.
திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரை பெரியார், காமராஜருக்கு ஒப்பாகவும், ஏழை எளியவர்களின் பாதுகாவலர் எனவும் பேசியிருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸ், திமுக இருவருமே கொள்ளையடிப்பதில் கூட்டாளிகள். 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் என பல்வேறு ஊழல்களில் இந்த கட்சிகள் ஈடுபட்டன.
அதே போல அதிமுகவினர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே, திமுக, அதிமுக இரண்டுமே விஷச் செடிகள். கடந்த 50 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்து கொள்ளையடித்திருக்கின்றனர். இந்தக் கட்சிகளால் எந்தவொரு வளர்ச்சியோ அல்லது மேம்பாடோ மேற்கொள்ளப்படவில்லை. 50 ஆண்டுகளாக அதே சாலைகள்தான் இருக்கின்றன. எந்த மாற்றமும் இல்லை. வாக்களித்து வாக்களித்து மக்கள் சோர்ந்து போய்விட்டனர்.
மதுவிலக்கே முடியாது என்ற அதிமுக, இப்போது தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறியிருக்கின்றனர். இதை மக்கள் நம்ப மாட்டார்கள்.
தேர்தல் முடிவுகள் குறித்து பல கருத்துக் கணிப்புகள் வருகின்றன. தங்களுக்கு வேண்டிய ஊடகங்கள் மூலம் இரு கட்சிகளும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதிலும் அவர்கள் கூட்டணிதான் வைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் கருத்துத் திணிப்புகள் மட்டும்தான்.
திமுக, அதிமுகவிடம் பணபலம் உள்ளது. என்னிடம் மனபலம் உள்ளது. இன்னும் 10 நாள்கள் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டிவிடுங்கள். மக்கள் நலக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்... மாநிலத்தில் மாற்றம் வரும்," என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications