டெங்கு காய்ச்சல் பற்றிய உண்மைத் தகவல்களை மறைப்பதா?: விஜயகாந்த் சாடல்
கும்பகோணம்: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த உண்மை தகவல்களை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறாமல் மறைப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி உயிரிழப்புகள் தொடர்வதாக கூறினார். டெங்கு காய்ச்சலே இல்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உண்மைக்கு மாறாகப் பேசுவதாகவும் விஜயகாந்த் புகார் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மதுவகைகளை விற்பனை செய்து, தமிழக அரசு லாபம் சம்பாதிப்பதாகவும், ஆனால் 3 கோடி ரூபாயில் செலவில் மது குடிக்க வேண்டாம் என விளம்பரம் செய்வது போலித்தனமாக உள்ளது என்றும் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் மோசடி நடக்கிறது. சோழநாடு சோறுடைத்தது என்பார்கள். முப்போகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் கருக்காவாக இருக்கிறது என்று கூறி குறைந்த விலையில் கொள்முதல் செய்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி, மாறி ஆட்சி செய்து விட்டார்கள். ஆனால் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை. கடைமடை பகுதி வரை தண்ணீர் வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுக்கப்படவில்லை. தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை நன்றாக வாழ வைப்போம்.
ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, மண்எண்ணெய் என எந்த பொருட்களும் சரிவர கிடைப்பது இல்லை என்று பொதுமக்கள் குறை சொல்கின்றனர். சத்துணவு திட்டத்தை தந்த தலைவர் எம்.ஜி.ஆர். ஆனால் கும்பகோணத்தில் அவர் படித்த பள்ளியில் சத்துணவு கூடம் இல்லாமல் கட்டிடத்தை கட்டி இருக்கின்றனர். 2016ம் ஆண்டு தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்று அ.தி.மு.க.வினர் நினைத்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications