அறிவிப்பின்றி தடைபடும் மின்சாரம்....அவதியில் தமிழக மக்கள் - புதுகையில் விஜயகாந்த் பேச்சு
புதுகை: தமிழகத்தில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடைசெய்யப்படுவதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் புகார் தெரிவித்துள்ளார். மேலும், சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜெயலலிதா மேஜையைப் பார்த்து பேசுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தே.மு.தி.க சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பேசிய கட்சித் தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் மின் தட்டுப்பாடே இல்லையென்றும், மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்கலாம் எனவும் மின்துறை அமைச்சர் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். ஆனால், குறைந்தபட்சம் 4 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 10 மணி நேரம் வரை தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாக விஜயகாந்த் குறிப்பிட்டார்.

மேலும் அவர், "தே.மு.தி.கவை பார்த்து அ.தி.மு.க, தி.மு.க., பயப்படுகிறது. டி.எஸ்.பி விஷ்ணு பிரியா கொலையை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கிறது. ஏன் ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை அவர்கள் கைது செய்யவில்லை.
அது ஜெயலலிதா போலீஸ். கூட்டணி குறித்து பேச அவசியமில்லை. அரசியலில் ஒருவாரம் அதிகம். டி.எஸ்.பிக்கு மன அழுத்தமா? மணி அழுத்தமா? டெபுடி சூப்பிரெண்டு போலீஸ் இன்று டம்மி சூப்பிரெண்டு போலீசாகிவிட்டது.
"சட்டசபைக்கு வாங்க" என்று கூப்பிடுகிறார்கள். தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்கின்றன. எதிர்கட்சிகளே இல்லாமல் ஜெயலலிதா மேஜையை பார்த்து பேசுகிறார். முதுகை திருப்பி பேசினால், கைதட்டும் எம்.எல்.ஏ க்கள் தெரிவார்கள்" என்று பேசினார். விழாவில் பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, அரசால் இலவசமாக வழங்கப்படும் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட எந்த ஒரு பொருளும் தரமாக இல்லை எனக் குறிப்பிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications