ஜெ.விடுதலை: நீதியே தலை குனிந்து நிற்கிறதே - லேட்டாக வேதனைப்படும் விஜயகாந்த்
சென்னை: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், நீதியே தலை குனிந்து நிற்பது போல் தெரிகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேதனையுடன் கூறியுள்ளார். தனி மனிதர் மீதான வழக்கை, பொது வாழ்க்கையில் முதல்வர் என்ற பெரிய பதவி வகிக்கும் ஒருவருக்கு பொருத்திப் பார்ப்பது நியாயம்தானா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக மக்கள் மட்டுமல்லாது இந்தியாவே எதிர்பார்த்திருந்த ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில், உலகமே எதிர்பாராத ஒரு தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்திருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தருகிறது.
பொது வாழ்வில் லஞ்சம், ஊழல் மூலம் காலணா காசு கூட சம்பாதிக்காமல் பொதுமக்களுக்காக சேவை செய்யவேண்டும் அதுதான் பொது வாழ்க்கை என்ற பாடத்தை கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பின் மூலம் உருவாக்கினார். ஆனால் அதே வழக்கில் தற்பொழுது வந்துள்ள தீர்ப்பு நேரெதிர் சிந்தனையை மக்கள் மனதில் உருவாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
ஒரு ஊழல் வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ஒரு ரூபாயும் ஒன்றுதான், ஒரு கோடியும் ஒன்று தான், இரண்டுமே ஒரே தண்டனைக்குரிய குற்றம்தான். ஆனால் இதற்கு முன்னால் ஒரு வழக்கில் தனி நபர் ஒருவர் பத்து முதல் இருபது சதவிகிதம் வரை தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டதாக மேற்கோள்காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுபோன்ற வேறுபல வழக்குகளில் இதே குற்றச்சாட்டிற்கு பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதை கருத்தில் கொள்ளாதது மக்கள் மனதில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனி மனிதர் மீதான வழக்கை, பொது வாழ்க்கையில் முதல்வர் என்ற பெரிய பதவி வகிக்கும் ஒருவருக்கு பொருத்திப் பார்ப்பது நியாயம்தானா? என்ற கேள்வி அரசியலில் தூய்மையை விரும்பும் எல்லோருடைய மனதிலும் எழுகிறது.
அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை இந்த வழக்கில் இருந்து நீக்கவேண்டும் என்ற மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் கொண்ட அமர்வு அளித்த சிறப்புமிக்க தீர்ப்பில், இந்த நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க வேண்டும் எனவே அதை மனதில் கொண்டு, ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட கருத்துக்கு மாறாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
சாதாரண சாமான்ய மக்களுக்கு ஒரு நீதி, பண பலமும், அதிகாரபலமும் மிக்கவர்களுக்கு ஒரு நீதியா? என்ற கருத்து மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. பொதுவாகவே நீதிக்கு தலை வணங்க வேண்டும், ஆனால் நீதியே தலை குனிந்து நிற்பது போல் தெரிகிறது இந்தத் தீர்ப்பால். இதற்கு காலம்தான் பதில் சொல்லும்" என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications