விஜயகாந்த்தை "லிமிட்" ஆக பயன்படுத்த தேமுதிக முடிவு?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவரை சுருக்கமான அளவில் பயன்படுத்திக் கொள்ள தேமுதிகவும், மக்கள் நலக் கூட்டணியும் திட்டமிட்டுள்ளனவாம்.
விஜயகாந்த் முன்பு போல இல்லை. அவரது உடல் நிலையில் பிரச்சினை உள்ளதால் அவரால் சரியாகப் பேசவும் முடியவில்லை. அவர் பேசுவது சரிவர புரியவும் இல்லை.
இதைக் கருத்தில் கொண்டு இந்த சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த்தை மிக மிக சுருக்கமான அளவில் பிரசாரத்தில் பயன்படுத்திக் கொள்ள தேமுதிக திட்டமிட்டுள்ளதாம்.

3 பேர்தான் முக்கியம்
வருகிற சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் வைகோ, திருமாவளவன் மற்றும் தேமுதிகவின் பிரேமலதா ஆகியோரைத்தான் ஸ்டார் பேச்சாளர்களாக இந்தக் கூட்டணி முடிவு செய்து வைத்துள்ளதாம்.

வெடிப் பேச்சுக்கு மூன்று பேர் மட்டும்
இந்த 3 பேரின் பேச்சுக்குத்தான் அதிக அளவில் கவனம் கிடைக்கிறது என்பதால் இவர்களையே ஸ்டார் பேச்சாளர்களாக தமிழகம் முழுவதும் களம் இறக்குகிறது இக்கூட்டணி.

10 இடத்துக்கு மட்டும் விஜயகாந்த்
மறுபக்கம் விஜயகாந்த்தை வைத்து 10 இடங்களில் பொதுக் கூட்டம் போடத் திட்டமிட்டுள்ளனர். இங்கு கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி விஜயகாநம்த் சிறப்புரை ஆற்றுவார். சுருக்கமான சிறப்புரையுடன் விஜயகாந்த்தின் பிரசாரம் முடிவடையும்.

டிவி மூலம் பேச வைக்கத் திட்டம்
இதுதவிர கேப்டன் டிவி மூலம் விஜயகாந்த்தைப் பேச வைத்து அதைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பும் திட்டமும் உள்ளதாம். இந்த சிடியை பட்டி தொட்டியெங்கும் போட்டுக் காட்டவும் திட்டமிட்டுள்ளனராம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications