கூட்டணி குறித்து கேப்டன்தான் முடிவெடுப்பார்.. சந்திரகுமார்

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் நடந்த சத்துணவுக் கூட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதாவுடன் கூட்டணியா? என்பது பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தொண்டர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பார்.
ஏற்காடு இடைத்தேர்லில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கும்படி அதன் தலைவர் கருணாநிதி அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து விஜயகாந்த் ஆலோசனை செய்து முடிவு அறிவிப்பார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாது மணல், ஆற்று மணல்கொள்ளை பற்றி தான் பேசினாரே தவிர எந்த சமுதாயத்தை பற்றியும் அவர் பேசவில்லை.
தேமுதிக எம்.எல்.ஏக்களை சஸ்பெண்டு செய்ததால் மக்கள் பணி செய்ய முடியாமல் போய்விட்டது. இந்த 6 மாத காலத்தில் எம்.எல்.ஏ.நிதியில் கட்டப்பட்ட பணிகளை கூட பார்வையிட எங்களை அனுமதிக்கவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications