தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரம்... தன்னிலை விளக்கம் அளிப்பதாக விஜயேந்திரர் மனு!
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக காஞ்சி இளைய சங்கராச்சாரியார் மீது தொடரப்பட்ட வழக்கில் தன்னிலை விளக்கம் அளிக்க அனுமதி கோரி விஜயேந்திரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக காஞ்சி இளைய சங்கராச்சாரியார் மீது தொடரப்பட்ட வழக்கில் தன்னிலை விளக்கம் அளிக்க அனுமதி கோரி விஜயேந்திரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் கடந்த மாதத்தில் நடைபெற்ற தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் காஞ்சி சங்கர மடத்தின் இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கலந்து கொண்டார். தேசிய கீதப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியவர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சங்கர மடம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் போது தியானம் செய்வது எங்களின் வழக்கம் என்று மழுப்பல் பதிலும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மீது வழக்கு பதிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது வழக்கை ஒரு வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனிடையே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தன்னிலை விளக்கம் அளிப்பதாக விஜயேந்திரர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications