ஜெயேந்திரர் மறைவு.. புதிய மடாதிபதியாகிறார் விஜயேந்திரர்: அடுத்த இளைய மடாதிபதி யார்?
ஜெயேந்திரர் மறைவானதை அடுத்து , காஞ்சி மடத்தின் அடுத்த பீடாதிபதியாகிறார் விஜயேந்திரர்.
Recommended Video

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மடத்தின் மூத்த பீடாதிபதியான ஜெயேந்திரர் உயிரிழந்த நிலையில் தற்போது இளைய மடாதிபதியாக உள்ள விஜயேந்திரர் மடாதிபதியாகிறார். சங்கரராமன் கொலை வழக்கு சர்ச்சையில் சிக்கிய அவரது தம்பி ரகு இளைய மடாதிபதியாகிறார் என்று தகவல்கள் வருகின்றன.
சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயேந்திரர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இளைய மடாதிபதி
அவரது உடல் சங்கர மடத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 1954-ம் ஆண்டு 19-ஆவது வயதில் காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டார் காஞ்சி ஜெயேந்திரர்.

69-ஆவது பீடாதிபதி
இதைத் தொடர்ந்து அப்போது மடாதிபதியாக இருந்த மகாபெரியவர் காலமான நிலையில் 69-வது மடாதிபதியாக 1994-ம் ஆண்டு ஜெயேந்திர சரஸ்வதி பொறுப்பேற்றார்.

70-ஆவது பீடாதிபதி
தற்போது ஜெயேந்திரரும் காலமாகிவிட்டதால் அந்த பொறுப்பை விஜயேந்திரர் ஏற்பார் என தகவல்கள் வந்துள்ளன. ஆனால் அடுத்த இளைய மடாதிபதி யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

விஜேயந்திரரின் தம்பி?
இப்பதவிக்கு விஜயேந்திரரின் தம்பி ரகு இளைய மடாதிபதியாகலாம் என்று கூறப்படுகின்றன. இவர் சங்கர ராமன் கொலை வழக்கில் சிக்கி சர்ச்சைகளில் அடிபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications