கோவில் உண்டியலை திருட முயன்ற நபரை அடித்தேக் கொன்ற கிராம மக்கள்!
ஈரோடு அருகே கோவில் உண்டியலை திருட முயன்ற நபரை கிராம மக்களே அடித்துக் கொன்றுள்ளனர். இதுதொடர்பாக 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு: கவுந்தப்பாடியை அருகே உள்ள கோவில் ஒன்றில் திருட முயன்ற நபரை விரட்டிப் பிடித்த கிராம மக்கள் அவரை அடித்தே கொன்றுள்ளனர். இதுதொடர்பாக கிராம மக்கள் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்த வளையக்காரன் பாளையத்தில் உள்ள அண்ணமார் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் 2 பேர் நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்துள்ளனர்.

உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் கோவிலுக்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது 2 பேர் உண்டியலை உடைப்பதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர்.
கூட்டம் திரளவே அச்சமடைந்த கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை விரட்டிச் சென்ற கிராம மக்கள் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அங்கு கட்டி வைத்து அந்த நபரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் மயக்கமடைந்த அந்த நபரை சிலர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் கொல்லப்பட்ட நபர் ஈரோட்டை அடுத்த ஆர்என்.புதூரை அடுத்த சிஎம்.நகரை சேர்ந்த 46 வயதான பழனிச்சாமி என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வளையக்காரன் பாளையத்தை சேர்ந்த 30 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் தப்பியோடிய மற்றொரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். கோவில் உண்டியலை திருட முயன்ற நபரை கிராம மக்களே அடித்துக் கொன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications