கனிமொழி எம்.பி. குறித்து அவதூறு: சர்ச்சைக்குரிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் கைது
விழுப்புரம்: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து அவதூறாக பேசியதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் இந்தப் போராட்டத்தை நடத்தி இருந்தனர்.

விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்டோரை அவதூறாக கலிவரதன் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விழுப்புரம் போலீசில் திமுகவினர் புகார் கொடுத்திருந்தனர்.

திமுகவினர் கொடுத்த இப்புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கலிவரதனை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்ட பாஜகவினர் பல்வேறு புகார்களை கூறி கலிவரதனை மாற்ற வேண்டும் என போராட்டங்கள் நடத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications