விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத்துக்கு எதிரான மனுவை ஏற்ற நீதிமன்றம்
விழுப்புரம்: மனு கொடுத்த நபரை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆலங்குப்பத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
உளுந்தூர்பேட்டையை அடுத்து உள்ளது தடுத்தாட்கொண்டூர் எம்.ஜி.ஆர். நகர். இங்குள்ள மலைக்குறவர் மக்கள் மீது வன்கொடுமை நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட கலெக்டர் சம்பத்திடம் மனு அளித்தோம். ஆனால் எங்களது மனு மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், இந்த சம்பவம் குறித்து கடந்த 10ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கேட்டபோது சம்பத் என்னை திட்டி, தாக்க முயற்சி செய்தார்.
நான் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால், மனு கொடுத்து நீதி கேட்ட என் மீது தாக்குதல் நடத்த முயன்ற மாவட்ட கலெக்டர் சம்பத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வெற்றிச் செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், புகாரை பதிவு செய்து கொண்டது. மேலும், மாவட்ட கலெக்டர் சம்பத் தாக்கியதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க மனுதாருக்கு உத்தரவிட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications