தினகரன் ஆதரவாளர்களை மாவட்டந்தோறும் களையெடுக்கும் அதிமுக.. விழுப்புரத்தில் 100 பேர் நீக்கம்
விழுப்புரம் மாவட்ட அதிமுகவிலிருந்து முன்னாள் எம்எல்ஏ கோதண்டராமன் உள்பட தினகரன் ஆதரவாளர்கள் 100 பேர் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்ட அதிமுகவிலிருந்து முன்னாள் எம்எல்ஏ கோதண்டராமன் உள்பட தினகரன் ஆதரவாளர்கள் 100 பேர் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசும், ஓபிஎஸ் தலைமையில் அதிமுக கட்சியும் இயங்கி வருகிறது. இந்நிலையில் தன்னுடைய ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இருப்பதாக தினகரன் பகிரங்கமாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அதிமுகவில் களையெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினகரன் ஆதரவாளர்கள் அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஒருவாரமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் எம்எல்ஏ கோதண்டராமன் உள்பட 100 பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் கொள்கைக்கும், கோட்பாட்டுக்கும் முரணான வகையில் இவர்கள் செயல்பட்டதால் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி கட்சிக்கு களங்கம் விளைவித்து அவப்பெயர் ஏற்படுத்தியதால் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிக்கட்சி தொடங்குவதில் தினகரன் மும்முரம் காட்டி வரும் நிலையில், அதிமுகவின் இந்த தொடர் நீக்கும் படலம் தினகரனின் கட்சிக்கு பலமாக அமையும் என்று கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications