விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் கன மழை பெய்யுமாம்.. வானிலை மையம் வார்னிங்!
விழுப்புரம், கடலூர் புதுச்சேரியில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: விழுப்புரம், கடலூர் புதுச்சேரியில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் பரவலாக நல்ல மழையை பெற்றன.

அதேநேரத்தில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக அவ்வப்போது லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது.
தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், கோவில்குளத்தில் தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications