Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர்கள் ராமராஜன், வையாபுரி, தியாகுமீது தேர்தல் விதிமீறல் வழக்கு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக நடிகர்கள் ராமராஜன், வையாபுரி, தியாகு ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

லோக்சபா தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து நடிகர் ராமராஜன் வியாழக்கிழமை இரவு கடையம் யூனியனுக்கு உட்பட்ட வடமலைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

Violation of norms: case against actors Ramarajan, Vaiyapuri and Tiyaku

அப்போது, அவர் தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெறாமல், தேர்தல் விதிகளை மீறி வேனில் ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆலங்குளம் தொகுதி பறக்கும் படை தாசில்தார் சந்திரசேகர் கடையம் காவல்துறையில் புகார் செய்தார். இதன்பேரில் நடிகர் ராமராஜன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் முருகேசன் ஆகிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தூத்துக்குடியில் பிரச்சாரம்

இதேபோன்று தூத்துக்குடி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசிங்கை ஆதரித்து நடிகர்கள் தியாகு, வையாபுரி ஆகியோர் பிரசாரம் செய்தனர். அப்போது உரிய அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பேரில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக தென்பாகம் காவல்துறையினர், நடிகர் வையாபுரி, தூத்துக்குடி பெருநகர அ.தி.மு.க. செயலாளர் ஏசாதுரை, கவுன்சிலர்கள் தனராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதே போன்று மத்திய பாகம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக நடிகர் தியாகு, ஏசாதுரை, ராஜசேகர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிட்னி பறிபோயிடும்

முன்னதாவ அ.தி.மு.க. வேட்பாளரை நடிகர் வையாபுரி, தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டபோது பேசியதாவது: ‘‘சட்டமன்ற தேர்தலின்போது சொன்ன திட்டங்களை அம்மா நிறைவேற்றி வருகிறார். ஆனாலும் உங்க ஏரியாவுக்கு இன்னமும் மிக்ஸி, கிரைன்டர், ஃபேன் கொடுக்கவில்லைன்னு கேள்வி பட்டேன். நிச்சயமாக உங்களுக்கு அது எல்லாம் வந்து சேரும் இப்போ தேர்தல் விதிமுறை இருப்பதால் அது தடைபட்டிருக்கிறது. தேர்தல் முடிந்தது. உங்க வீடு தேடி வரும்.

ரெஸ்ட் எடுக்கலாம்

அதை வாங்கி சட்னி, சாம்பார் வைச்சு சாப்பிட்டு ஃபேன் காற்றுல படுத்து நல்லா தூங்குங்க. அம்மாவுக்கு ஓட்டு போட்டா இட்லி சாப்பிடலாம். கருணாநிதிக்கு ஓட்டு போட்டா அவங்க உங்க கிட்னியை எடுத்திடுவாங்க. பாத்துக்கோங்க. ஏன்னா? உணவு, உடை, இருப்பிடம் அத்தனையையும் அம்மாதான் தருவார். மற்றவங்க தருவதா சொல்வாங்க, தரமாட்டாங்க.

ஆடு, மாடு குட்டி போடும்

இந்த நாட்டில் வரியில்லாத பட்ஜெட் போட்டது அம்மாதான். ஆடு, மாடு கொடுத்து ஒவ்வொரு குடும்பத்தையும் பொருளாதாரத்தில் உயர செய்து வருவது அம்மா மட்டும்தான். ‘மக்களை ஆடு, மாடு மேய்க்க சொல்றாங்கன்னு எதிரணியில இருந்து பேசுறாங்க. அட மடையங்களா, ஆடு, மாடு குட்டி போடும் அதனால குடும்பம் வளரும். நீங்க கொடுத்த டி.வி, கரண்ட் பில் வட்டிதானே போடும்.

தனியாக போட்டியிட தைரியம்

காலணி முதல் கணிணி வரை கொடுப்பது அம்மா மட்டும்தான். ‘எங்க கூட்டணிக்கு வாங்க, வாங்க'னு மற்ற கட்சிகளை எத்தனையோ பேர் கூப்பிடுறாங்க. ஆனா தனி கட்சியா களத்தில் இறங்குகிற தைரியம் அம்மாவுக்கு மட்டும்தான் இருக்கிறது'' என்று பேசினார். இப்போது வையாபுரி மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பாய்ந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+