"கொஞ்சம் நடிங்க பாஸ்".. விருதுநகர் இளைஞரை உசுப்பேத்தி ரூ. 95,000 மோசடி!
விருதுநகர்: விருதுநகர் இளைஞர் ஒருவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 95 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே மேலஆமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன். இவர் வேதியியல் துறை முதுகலை பட்டதாரி ஆவார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து இவரது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
தொலைக்காட்சியில் பணி:
அதில், ஒருவர் தான் கிசோன் காமராஜ் பேசுவதாகவும், பிரசித்தி பெற்ற தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நடிப்பதற்கு வாய்ப்பு:
அதோடு, திரைப்படத்துறையில் நன்கு அறிமுகம் உள்ளதாகவும் கூறி நடிப்பதற்கு வாய்ப்பு பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார்.
95 ஆயிரம் ரூபாய் பணம்:
இதைத் தொடர்ந்து நடிப்பதற்கு பணம் தேவையென அந்த பிரமுகர் கேட்டதைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பரில் விருதுநகர் கனரா வங்கி மூலம் ரூபாய் 88 ஆயிரமும், அதன் பின்னர் மீண்டும் எஸ்பிஐ வங்கியின் மூலம் ரூபாய் 7 ஆயிரமும் அனுப்பியுள்ளார்.
வாய்ப்பு கிடைக்காமல் தவிப்பு:
குறிப்பிட்ட நாள்கள் கடந்த பின்னும் இதுவரையில் வாய்ப்பு வாங்கித் தரமால் காலதாமதம் செய்து வந்துள்ளார். இதையடுத்து, தொடர்பு கொண்டு வாய்ப்பு தாருங்கள், இல்லையென்றால் பணத்தை திருப்பித் தரும்படி மாரீஸ்வரன் கேட்டுள்ளார்.
மிரட்டலால் அதிர்ச்சி:
அதையடுத்து சென்னை வடபழனிக்கு புறப்பட்டு வரும் படி கூறியதை தொடர்ந்து உடனே புறப்பட்டுச் சென்றுள்ளார். குறிப்பிட்ட இடத்தில் நிற்பதாக கூறி தொடர்பு கொண்டதற்கு, இங்கு எதற்கு வந்தாய் எனக் கூறி உடனே திரும்ப செல்லும் படியும் கூறி மிரட்டியுள்ளார்.
ஏமாற்றப்பட்ட மாரீஸ்வரன்:
பின் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது கைபேசியின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
விருதுநகரில் புகார்:
இது தொடர்பாக மாரீஸ்வரன் விருதுநகர் ஜே.எம் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மனுவை விசாரித்த நீதிபதி உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையம் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
போலீசார் விசாரணை:
இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் திரைப்பட பிரமுகர் கிசோன் காமராஜ் மீது வழக்கு பதிந்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications