For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

9 போலீஸ் நிலையங்களைக் கொடுத்து விஷ்ணுப்புரியாவை வேலை வாங்கி கொடுமைப்படுத்தியுள்ளனர்.. இளங்கோவன்

Google Oneindia Tamil News

சென்னை: டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் வசம் 9 காவல் நிலையங்களைக் கொடுத்து கடுமையான வேலைப்பளுவை உருவாக்கி கொடுமைப்படுத்தியுள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

Vishnupriya was given over workload, says EVKS Elangovan

சென்னையில் இன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார் இளங்கோவன். அப்போது அவர் கூறியதாவது:

  • திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
  • விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும் அதை நம்ப முடியவில்லை.
  • விஷ்ணுபிரியா நேர்மையானவர். யாரிடமும் எதையும் அவர் எதிர்பார்த்து செயல்படவில்லை.
  • வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் என்றாலும் கூட சொந்தக் காசில்தான் அவர் எதையும் செய்வார்.
  • டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் கட்டுப்பாட்டில் 9 போலீஸ் நிலையங்கள் ஒப்படைத்து பணி செய்யக் கூறியுள்ளனர்.
  • விஷ்ணுப்பிரியாவுக்கு அதிக அளவில் வேலைப்பளுவை கொடுத்துள்ளனர்.
  • சிபிசிஐடி விசாரணையை விட சிபிஐ விசாரணைதான் அவசியம். அப்போதுதான் தீர்வு கிடைக்கும்.
  • விஷ்ணுபிரியாவின் தோழியான கீழக்கரை டி.எஸ்.பி. உமா மகேஸ்வரி மற்றும் விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி ஆகியோரது வாக்குமூலத்தை சாட்சியாக சேர்க்க வேண்டும்.
  • காவல் துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா, விஷ்ணுபிரியா மரணம் குறித்து அனுதாபமோ, இரங்கலோ தெரிவிக்கவில்லை.
  • துணை நடிகை பரவை முனியம்மாவுக்கு காட்டிய பரிவைக் கூட தான் சேர்ந்த துறையைச் சேர்ந்த டிஎஸ்பியின் மறைவுக்கு அவர் காட்டவில்லை.
  • தமிழகத்தில் போலீசார் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவதே இல்லை. காவல் துறையில் அரசியல் தலையீடு அதிகம் உள்ளது.
  • தமிழ்நாட்டில் 15,000 பெண் போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.
  • கடந்த 4 ஆண்டு அதிமுக ஆட்சியில் 266 போலீசார் மர்மமான முறையில் இறந்து உள்ளனர். இதில் பெண் போலீசாரும் அடங்குவார்கள்.

விஷ்ணுபிரியா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை அண்ணாசாலையில் நாளை காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் அதன் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார் அவர்.

English summary
TNCC president EVKS Elangovan has said that DSP Vishnupriya was given over workload and was asked to oversee 9 police stations in her sub division.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X