தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி 86 சதவீதம் முடிந்துள்ளது: தலைமை தேர்தல் அதிகாரி
சென்னை: திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் திட்டமிட்டப்படி ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் 86 சதவீதம் நிறைவடைந்து விட்டது. மீதம் உளள பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு திட்டமிட்டபடி வரும் ஜனவரி 5ம் தேதி அன்று புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்களில் விண்ணப்பித்தவர்களில் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் புதிய வாக்களர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். புதிய வாக்காளர்களுக்கு வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை வழங்கப்பட உள்ளது.
தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி அன்று புதிய வாக்காளர்களுக்கு வண்ணப் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், அனைத்து வாக்காளர்களுக்கும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வண்ணப் புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications