வாக்காளர்களுக்கு ரோஜாப்பூ, கல்கண்டு, மோர் கொடுத்து அசத்திய தேர்தல் அதிகாரிகள்
மதுரை: மதுரை யாதவா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு ரோஜாப்பூ, கல்கண்டு, நீர்மோர் வழங்கி தேர்தல் அதிகாரிகள் அசத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் போது எல்லாம் தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடியை தேர்வு செய்து அதை மாதிரி வாக்குச்சாவடியாக மாற்றுமாறு தேர்தல் ஆணையம் அதிகாரிகளை வலியுறுத்தியிருந்தது. அதன்படி மதுரை தொகுதிக்குட்பட்ட யாதவா கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மாதிரி வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டது.
யாதவா கல்லூரி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு ரோஜாப்பூ, கல்கண்டு கொடுத்து தேர்தல் அதிகாரிகள் வரவேற்றனர். கோடை காலம் என்பதால் ஷாமியானா பந்தல் போடப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
இது தவிர முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வசதி கருதி சக்கர நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications