ஆர்கே.நகர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் பயன்படுத்தப்படும் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தனி அறையில் வைக்கப்பட்ட 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பாக அதாவது வரும் 11ஆம் தேதி அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 64 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications