கர்நாடகா கன மழை... நிரம்புகிறது கெலவரப்பள்ளி- தென்பெண்ணையில் வெள்ள அபாயம்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்பி வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் 2,000 கனடி நீரும் உபரி நீராக தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்பி வருகிறது.

அணையின் மொத்த கொள்ளளவு 44.3 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 42.5 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு வரும் 2,000 கனஅடி நீர் அப்படியே தென்பெண்ணையாற்றில் உபரி நீராக திறந்துவிடப்படுகிறது.

இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆடுகிறது. இதைத் தொடர்ந்து கரையோரத்தில் உள்ள 10 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோரா மூலம் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications