பலத்த மழை... கடகடவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம் - வீடியோ
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்: தொடர் மழையினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழகம் வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்தனர்.

இந்த அவலநிலையில் இருந்து மக்களையும் மண்ணையும் காப்பாற்றும் விதமாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு வறட்சியில் மேட்டூர் அணை வறண்டுவிட்ட நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகலீல் நல்ல மழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் தற்போது 59.12 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்துக் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அணைக்கு விநாடிக்கு தற்போது 7538 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. அதேபோல் அணையிலிருந்து குடிநீர்த்தேவைக்காக 1300 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. மழை தொடர்ந்து பெய்தால் மேட்டூர் அணையின் 120 அடி நீர்மட்டத்தில், விரைவில் நிரம்பும் பொது மக்களின் நம்பிக்கை.












Click it and Unblock the Notifications