தேர்வு எழுதுவதே மாணவர்களுக்கு கஷ்டம்.. இதில் தண்ணீரில் நடந்து வேறயா?
சென்னை உள்ளிட்ட இடங்களில் கனமழை மிரட்டும் நிலையிலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மழை நீரில் கஷ்டப்பட்டு நடந்து போய் தேர்வு எழுத மாணவர்கள் செல்லும் வீடியோ வைரலாகி உள்ளது.
Recommended Video

சென்னை: கனமழையால் பள்ளிகளுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு எழுத கல்லூரி வளாகத்தில் தேங்கியுள்ள நீரில் சிரமப்பட்டு மாணவர்கள் செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சென்னையில் கடந்த 4 நாள்களாக பெய்து வரும் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் நடந்து வருகிறது. தொடர் மழையால் தேர்வுகள் நடக்குமா என்று மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி இன்று தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Ipdi laam Poi Exam eludhuradhu Namma Oorula mattum thaan nadakkum #AnnaUniversity #ChennaiRains #ChennaiRains2017 pic.twitter.com/GVN55fszsM
— TrendsWood (@Trendswoodcom) November 4, 2017
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ள தண்ணீரில் மாணவர்கள் தேர்வு எழுத செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது நிஜமாகவே அண்ணா பல்கலைக்கழகம்தானா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications