மழை நின்றும் வடியாத வெள்ளம்... தவிப்பில் வளசரவாக்கம், விருகம்பாக்கம்- போக்குவரத்து பாதிப்பு
சென்னை: முக்கிய சாலைகளில் வெள்ளநீர் வடிந்த பின்னரும், சென்னையில் வளசரவாக்கம், விருகம்பாக்கம், திருநகர், போரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னமும் வெள்ளநீர் வடியாமல் இருக்கின்றன. மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அக்டோபர் 28ம் தேதி முதல் வடகிழக்குப் பருவ மழை பெய்யத் தொடங்கியது. நவம்பர் 8ஆம் தேதி 28ம் தேதி வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதையெல்லாம்விட, கடந்த 1ம் தேதியன்று நாள் முழுவதும் இடைவிடாமல் பெய்த வரலாறு காணாத மழையால், சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளிலிருந்து உபரி நீர் பலமடங்கு திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக வேளச்சேரி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, ராமாவரம், விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளும், தாம்பரம், முடிச்சூர் சுற்றியுள்ள பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.
டிசம்பர் 2 ஆம் தேதி முதல் மழையின் அளவு படிப்படியாக குறைந்தது. அதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஏரிகளிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டதால், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடியத் தொடங்கியது. கோட்டூர்புரம், தியாகராய நகர், சைதாப்பேட்டையின் சில பகுதிகளில் தேங்கிநின்ற வெள்ள நீர் ஞாயிற்றுக்கிழமையன்று முழுவதுமாக வடிந்தது. எனினும் ஜமாலியா, விருகம்பாக்கம் ஆற்காடு சாலை, ராமாவரம், வளசரவாக்கம், வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

நிவாரணப்பணிகள்
மழை நின்று விட்டாலும், சென்னையில் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னமும் அகலவில்லை. நகரின் முக்கிய பகுதிகளில் வடிகால் வசதியுடன் இருக்கும் சாலைகளில் வெள்ளநீர் வழிந்தோடி விட்டது. இதனால் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. படகில் சென்ற பல இடங்களுக்கு நடந்து சென்று உணவு, நிவாரணப் பொருட்களை அளித்து வருகின்றனர் ராணுவத்தினர், தன்னார்வலர்கள்.

வடியாத வெள்ளநீர்
வளசரவாக்கத்திலும், விருகம்பாக்கத்திலும் வெள்ளநீர் வடியாமல் தேங்கிக்கிடக்கிறது. இதில் புழுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லை அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள். கடந்த நவம்பர் 23ம் தேதி பெய்த மழையின் வெள்ளநீர் வடியாமல் தேங்கியிருந்த நிலையில் நவம்பர் 30ம் தேதி பெய்த மழையால் விருகம்பாக்கம், வளசரவாக்கம் பகுதிகளில் 5 அடியாக மழை நீர் தேங்கியது.

மின்விநியோகம் தடை
வளசரவாக்கம் ராதாநகர், லட்சுமி நகர் பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழை, வெள்ளநீரை வடியவிடாமல் செய்கிறது. இதனால் கடந்த 7 நாள்களாக மழை நீர் வடியாததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த ஒருவார காலமாக மின்சாரம் விநியோகம் தடைபட்டுள்ளதால் வளசரவாக்கம், விருகம்பாக்கம் பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குடியிருப்புகளுக்குள் வெள்ளம்
விருகம்பாக்கம் சாலையில் ஏற்பட்ட வெள்ளம் அந்த பகுதியில் உள்ள 2 ஆயிரம் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். போரூர் ரவுண்டானாவில் தேங்கி நிற்கும் நீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சாலையில் வெள்ளப்பெருக்கு
வளசரவாக்கத்திலிருந்து விருகம்பாக்கம் செல்லும் ஆற்காடு சாலையின் இருபுறமும் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் நீரில் மிதந்தபடி செல்கிறது. சாலையின் ஒரு புறத்தில் கனரக வாகனங்களும், மறு பாதையில் சிறு வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வெளியேறிய பொதுமக்கள்
வளசரவாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்குள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விட்டதால் வீடுகளில் வசிக்க முடியாமல் பலர் தங்களது வீடுகளை பூட்டி விட்டு உறவினர்களின் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

3 சக்கர சைக்கிளில் முதியோர்கள்
முதியோர்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து வர முடியாத காரணத்தால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் மூன்று சக்கர சைக்கிள்களில் முதியவர்களை ஏற்றிக்கொண்டு மெயின்ரோடு வரை கொண்டு வந்து விடுகின்றனர். இதற்காக அவர்களிடமிருந்து ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் சிலர் இதை சேவையாக செய்து வருகிறார்கள். கோயம்பேடு தீயணைப்பு வீரர்களும் படகுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு கொண்டு வரும் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்தப்பகுதியில் முதல் மாடி வரை தண்ணீர் சூழ்ந்த காரணத்தால் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள்கள் மற்றும் கார்களும் நீரில் மூழ்கி விட்டன. மேலும் கடந்த ஒருவாரமாக மின்சாரம் மற்றும் அடிப்படை தேவைகள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

போரூரில் நீந்தும் வாகனங்கள்
சென்னையின் முக்கிய நுழைவு வாயிலான போரூர் ரவுண்டானாவில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. போரூர் குன்றத்தூர் சாலை, போரூர் ஆற்காடு சாலை, மவுண்ட்-போரூர் சாலை உள்ளிட்ட 4 சாலைகளிலும் மழைநீர் அதிகஅளவில் தேங்கி உள்ளதால் வானங்கள் அனைத்தும் நீரில் மிதந்து செல்கின்றன. 4 வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் ஒருவாகனம் மட்டுமே செல்கிறது.

கடைகளுக்குள் வெள்ளம்
சாலையோர கடைகளுக்கும் இந்த வெள்ளம் புகுந்துள்ளதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற மாநகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இப்பகுதிவாசிகளின் குற்றச்சாட்டாகும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications