கட்டு கட்டாய் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி: வாட்ஸ் அப்பில் வைரல் ஆன வீடியோ
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர், ஒப்பந்ததாரரிடம் கட்டுக் கட்டாய் லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் உள்ள கோட்ட பொறியாளர் சிதம்பரம் என்பவர்தான் ஒப்பந்ததாரரிடம் பணி வழங்க கட்டு கட்டாக பணத்தை வாங்கியவர். இந்த வீடியோ காட்சி தான் தற்போது வாட்ஸ் அப்பில் உலா வருகின்றன.
அரசு வேலை, ஒப்பந்தப் பணி போன்றவற்றில் ஈடுபடுவோர் லஞ்சம் கேட்டால் அவர்களை கையும் களவுமாக பிடிக்கும் பணிக்கென லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளனர். ஆனால் இப்போது அந்த வேலையை நவீன காமிராக்களும், செல்போன் உபகரணங்களும் செய்து விடுகின்றன. லஞ்சம் கொடுப்போரே அதனை ரகசியமாக படம் பிடித்து ஊடகங்களுக்குக் கொடுத்து விடுகின்றனர். அதுவும் வாட்ஸ் அப் வந்தாலும் வந்தது. உடனே மூலை முடுக்கெல்லாம் பரவி பட்டையை கிளப்புகிறது.

பொதுப்பணித்துறையில் லஞ்சம்
அந்த வகையில், தேனி மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் ஒப்பந்தத்தாரரிடம் பணம் கேட்டு நச்சரிக்கும் உரையாடல் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘வாட்ஸ் அப்'பில் வெளியானது. அந்த அதிகாரி யார்? என்று விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பான ஒரு ப்ளெக்ஸ் போர்டும் சென்னையில் வைக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ந்து போன அதிகாரிகள் அந்த தட்டிப்போர்டை அங்கிருந்து அகற்றினர்.

வாட்ஸ் அப் வீடியோ
இந்த நிலையில் நேற்று குமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஒருவர் ஒப்பந்தத்தாரரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் ‘வாட்ஸ் அப்'பில் வேகமாக பரவியது. 48 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஒப்பந்தத்தாரர், பொறியாளர் சிதம்பரத்தின் அலுவலகத்திற்கு சென்று அவரோடு பேசிக்கொண்டிருக்கிறார். அதிகாரி கையில் பேனாவை உருட்டியபடி ஒப்பந்தத்தாரரிடம் பேரம் பேசுகிறார். சில வினாடிகள் கடந்ததும், ஒப்பந்தத்தாரர் தயாராக வைத்திருந்த பணக்கட்டை எடுத்து பொறியாளரிடம் கொடுக்கிறார். அதில், 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை ஒரே கட்டாக கட்டப்பட்டிருந்தது. அதனை மேலும் கீழும் பார்த்த அதிகாரி, அந்த பணம் எவ்வளவு இருக்கும் என்பதை குத்து மதிப்பாக எண்ணிப்பார்க்கிறார். பின்னர் அதனை தனது கைப்பையில் வைக்கிறார். அத்துடன் காட்சி முடிகிறது. இந்த வீடியோ காட்சியில் ஒப்பந்தத்தாரரின் உருவம் பதிவாகவில்லை. பணம் வாங்கும் பொறியாளர் சிதம்பரத்தின் உருவம் மட்டுமே தெரிகிறது.

சாலை பணிக்கு லஞ்சம்
அவர், குமரி மேற்கு மாவட்ட சாலைப்பணிக்களுக்கான ஒப்பந்தங்களை அளிக்கும் பொறுப்பு வகித்து வருகிறார். அருமனை பகுதியில் நடைபெற்ற சாலைபணிக்காக இந்த பணம் கை மாறியதாக கூறப்படுகிறது.
இது எப்போது எடுக்கப்பட்ட வீடியோ? எதற்காக இந்த நேரத்தில் வெளியானது? இதனை ‘வாட்ஸ் அப்'பில் பரப்பியது யார்? என்பது பற்றி அதிகாரிகள் தரப்பு ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொறியாளர் இடமாறுதல்
பணத்தை வாங்கிய பொறியாளர் சிதம்பரத்திற்கு சமீபத்தில் தான் இடமாறுதல் உத்தரவு வந்துள்ளது. இதற்காக அவர், அலுவலக ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத்தாரர்களுக்கு விருந்து அளிக்க இருந்தார். இந்த நிலையில் லஞ்ச வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே வீடியோ காட்சி வெளியானது குறித்து பொறியாளர் சிதம்பரத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications