கடும் சீற்றத்துடன் காணப்படும் கடல்.. மீனவர்கள், பொதுமக்கள் கடலில் இறங்க தடை
தமிழக கடற்பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழக கடற்பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலில் ஏற்பட்டுள்ள தொலைதூர சலனங்கள் மற்றும் இயற்கை மாற்றத்தால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என கடல்சார் தகவல் மையம் தெரிவித்திருந்தது.

இதன்காரணமாக இன்று முதல் 2 நாட்களுக்கு கடலில் நெருங்கிய இடைவெளியில் 3.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் சீற்றத்துடன் எழும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் பொதுமக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்தது.
கடல்சார் தகவல் மையத்தின் எச்சரிக்கையை அடுத்து பாம்பன் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 150-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் பக்தர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகின்றன. பலத்த காற்று, கடல் சீற்றத்தால் 11 அடி உயரத்திற்கு அலைகள் எழும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே கடலோர பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் ராமேஸ்வரம், கன்னியாகுமரி கடற்பகுதிகள் அதிகம் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications