இந்தியை எதிர்க்கவில்லை… இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்… மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்
இந்தியை எதிர்க்க வில்லை; இந்தி மொழித் திணிப்பைத்தான் எதிர்க்கின்றோம் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள தண்டையார் பேட்டையில் திருமண விழா ஒன்றில் ஸ்டாலின் இந்தக் கருத்தை வெளியி
சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டையில் இன்று திருமண விழாவில் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய அவர், இந்தியை எதிர்க்கவில்லை என்றும் இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கின்றோம் என்றும் கூறினார். இந்தியை திணிக்க வேண்டாம் என்றுதான் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆர்கே நகர் தொகுதி மக்கள் ஆளும் கட்சியை எதிர்க்கின்றனர் என்று கூறிய ஸ்டாலின், ஆர்.கே. நகர் மக்கள் எதிர்கால தலைமுறையை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று விழாவில் பங்கேற்றவர்களை கேட்டுக் கொண்டார்.
அதே போன்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு என்பது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யும் என்று மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக தொண்டர்களும் அப்பகுதி மக்களும் கலந்து கொண்டனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications