வேலை கொடுக்கும் ஆலைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை.. கமல்ஹாசன் விளக்கம்

வேலை வாய்ப்பு வழங்கும் ஆலைகளுக்கு மக்கள் நீதி மையம் எதிரானது அல்ல என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலை வாய்ப்பு வழங்கும் ஆலைகளுக்கு மக்கள் நீதி மையம் எதிரானது அல்ல என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் விசில் செயலியை அறிமுகப்படுத்தினார்.

We are not against the factories that offer a lot of job opportunities: Makkal Needhi Maiam

இதில் மக்கள் தங்களின் பொதுப் பிரச்சனைகளை பதிவு செய்யலாம் என்றும், அதற்கு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மூலம் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர், அங்கிருக்கும் ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுத்துகிறது என்று மய்யம் விசில் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் நீதி மய்யம் பெருமளவு வேலை வாய்ப்புகள் வழங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் வணிகம் மற்றும் வேலை வாய்ப்பின் பெயரில் நிகழும் கொடுமையான மாசுகளுக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசு இது போன்ற பொறுப்பற்ற மாசுக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அனகாபுத்தூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை தேவை! தொழில்கள் மெல்லச் சாகக்கூடாது... மக்களும் தான்! என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+