தேமுதிக என்ன வேண்டுமானாலும் முடிவெடுக்கட்டும், கவலையில்லை... டயர்ட் ஆன பொன். ராதா பேட்டி!
மதுரை: ஒரு கட்சி என்ன முடிவெடுக்க வேண்டும் என்று மற்றவர்கள் கூற முடியாது. எனவே தேமுதிக என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கட்டும். அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்று விஜய்காந்த் தரப்புடன் கூட்டணிக்கு கடுமையாக முயன்று டயர்ட் ஆகிவிட்ட தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தேமுதிகவின் சோதனையைத் தாங்க முடியாமல் தவிக்கிறார்கள் திமுகவும், பாஜகவும்.
எப்படியெல்லாம் சோதிக்க முடியுமோ அப்படியெல்லாம் பாடாய்ப்படுத்தி வருகிறது தேமுதிக. இதுவரை எந்தக் கட்சிக்காகவும் இப்படி தேவுடு காத்ததில்லை திமுக. ஆனால் அக்கட்சியே விஜயகாந்த் வாய் திறக்கப் போவதை எதிர்பார்த்து இன்னும் கூட மெளனமாய் காத்திருக்கிறது.
பாஜகவோ, எப்படியாவது நம்முடன் தேமுதிக வந்தால் சரித்தான் என்ற ரேஞ்சுக்கு விரக்தியாகி உட்கார்ந்திருக்கிறது. இந்த நிலையில் மதுரை வந்த பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணி குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். அவரது பேட்டி...

மோடி வந்தாரா...
சென்னையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டார்.

அந்த மேடையில் வைத்து
அந்த மேடையில் கூட்டணியில் பங்கேற்க கூடிய கட்சியின் தலைவர்களை கலந்து கொள்ளச் செய்வதற்காகவே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அதற்கு மேல் நேரமில்லை
கடந்த 7ந் தேதிக்கு பின் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்த நேரமில்லை. காரணம் பிதரமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவதில் கவனம் செலுத்தினோம்.

அது அவங்க பாடு
ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது பற்றியும், கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது பற்றியும் அந்த கட்சி தலைவர் முடிவெடுக்க உரிமை உண்டு.

கவலையே இல்லை
அதில் மற்றவர்கள் தலையிட முடியாது. அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் கவலையில்லை என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்











Click it and Unblock the Notifications