சிஸ்டத்தை மாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் : ரசிகர்களுடன் வீடியோ கான்பரன்ஸிங்கில் ரஜினி பேச்சு
சிஸ்டத்தை மாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ரஜினி வீடியோ கான்பரன்ஸிங் உரையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : சிஸ்டத்தை மாற்ற தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ரஜினிகாந்த் தனது தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸிங்கில் இன்று பேசியுள்ளார்.
ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். இதனையடுத்து நேற்று தனது வீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, விரைவில் எஞ்சிய மாவட்டங்களுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தபின் தீவிர அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தனது அரசியலுக்குப் பின்னால் மக்களும், கடவுளும் தான் இருக்கிறார்கள் எனவும், பாஜக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், ரஜினி இன்று தென்சென்னை ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸிங்கில் உரையாற்றினார்.
அப்போது, ரசிகர்கள் எப்போதும் இதயத்தையும் எண்ணத்தையும் தூய்மையாக வைக்கவேண்டும் என்றும், ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வாய்ப்பின் மூலம் தமிழக அரசியலலில் மாற்றத்தைக் கொண்டு வர அனைவரும் உழைக்க வேண்டும் என்றும், அதன் மூலம் சிஸ்டத்தை முழுமையாக மாற்ற அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், பதவி கிடைக்கவில்லை என்றும் யாரும் வருத்தப்படக்கூடாது என்றும் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications