ஜிஎஸ்டியை கொண்டு வந்தது காங்கிரஸ்தான்... உண்மையை சொன்ன குஷ்பு!
இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் வணிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ள ஜிஎஸ்டி வரியை, “நாங்கதான் கொண்டு வந்தோம் அது பாஜக கொண்டு வந்தது இல்லை” என்று நடிகை குஷ்பு தெரிவ
சென்னை: ஒரே நாடு ஒரே வரி என்ற முழக்கத்தோடு ஜிஎஸ்டியை அமல்படுத்தியுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இந்த நிலையில் ஜிஎஸ்டியை நாங்கதான் கொண்டுவந்தோம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், " இந்த ஆட்சி வேடிக்கையாகவும், காமெடியாகவும் தான் எல்லோராலும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் நிலவரங்களை பார்த்து, வெளிநாடுகளில் வாழ்பவர்கள் கூட கிண்டல் செய்கின்றனர்.
ஜி.எஸ்.டி., வரியை, பா.ஜ.க., கொண்டு வந்தது போல, மோடி விளம்பரம் தேடுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் தான் இது கொண்டு வரப்பட்டது.

எச்சரித்த ராகுல்
18 சதவீதத்துக்கு மேல் வரி விதித்தால், மிகப்பெரிய ஆபத்தாகி விடும் என, ராகுல் முன்பே கூறினார். காங்கிரஸ் அரசு ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது, மக்களின் சாதக, பாதகங்களை பார்க்கும்.

எட்டாத தூரம் போன அத்தியாவசிய பொருட்கள்
ஜி.எஸ்.டி., வரியால், பல அத்தியாவசிய பொருட்கள், ஏழை மக்களின் கைக்கு எட்டாத தூரத்துக்கு சென்று விடும். இனி, ஊழல் நடக்காது, அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்று பா.ஜ.கவால் கூற முடியுமா?

ஸ்டிக்கர் ஓட்டும் பாஜக
காங்கிரஸ் திட்டங்களை எல்லாம், இவர்கள் கொண்டு வந்தது போல, 'ஸ்டிக்கர்' ஒட்டி விளம்பரம் தேடுகின்றனர். விளம்பரம் தேடுவது மட்டும், ஒரு அரசின் கடமை அல்ல, வேலை நடக்க வேண்டும்.

கேரள அரசு மேல்
ஜிஎஸ்டி மூலம் சினிமாவுக்கு, 30 சதவீத வரி விதிக்கின்றனர். இதற்கு மேலும், தமிழக அரசு வரி விதிக்க உள்ளது. ஆனால், கேரளாவில் ஜி.எஸ்.டி. வரியை தவிர, வேறு வரி கிடையாது என, அந்த மாநில அரசு உறுதியாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவுக்கு பெரிய ஆபத்து
ஆனால், தமிழக அரசு அறிவிக்கவில்லை. சினிமா தொழிலுக்கான வரியை குறைக்காவிட்டால், மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்." என்று தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு.












Click it and Unblock the Notifications