பாஜக அணிக்கு ரஜினியிடம் ஆதரவு கேட்போம்!- பொன் ராதாகிருஷ்ணன்

தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.
இதில் பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன், தமிழிசை சவுந்தர்ராஜன், அகில இந்திய இணை பொதுசெயலாளர் சத்தீஷ் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து தேர்தல் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்திய அளவில் மோடி அலை நன்றாக உள்ளது. தமிழகத்திலும் அந்த அலை முழுமையாக உள்ளது. பிப்ரவரி மாதம் 15ந் தேதிக்குள் குஜராத் முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை தமிழத்திற்கு மீண்டும் வருகை தருமாறு அழைத்துள்ளோம். அவர் வருகை தேதி ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்.
பா.ஜ.க. கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக பா.ம.க.வுடன் ஏற்கனவே பேசி உள்ளோம். ம.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து பேசிவருகிறோம். தே.மு.தி.க. எங்கள் கூட்டணிக்கு வரும் என நம்பிக்கை உள்ளது.
மேலும் நடிகர் ரஜினி காந்த் உட்பட தமிழத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்களிடம் ஆதரவு கேட்க உள்ளோம். இதனால் பலமான அணியாக தமிழகத்தில் பாரதிய ஜனதா தேர்தலை எதிர்கொள்ளும்," என்றார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications