ஜெ. மரண கேஸ் முடியும் வரையெல்லாம் பொறுக்க முடியாது, சட்டுன்னு முடிவெடுங்க.. ஜெயகுமார்
ஜெயலலிதா மரணம் குறித்த தீர்ப்பு வரும்வரை எல்லாம் அதிமுக இணைப்புக்காக காத்திருக்க முடியாது என்று நிதி அமைச்சர் ஜெயகுமார், ஓபிஎஸ் அணிக்கு கெடு விதித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து தீர்ப்பு வரும் வரை அணி இணைப்புக்காக எங்களால் காத்திருக்க முடியாது என்பதால் உடனடியாக ஒரு பேச்சுவார்த்தை குறித்து நல்ல முடிவு எடுங்கள் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
இரட்டை இலை முடக்கப்பட்டதை தொடர்ந்து அவற்றை மீட்டெடுக்க அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என விரும்பினர். இதற்காக நள்ளிரவு ஆலோசனைகள் எல்லாம் நடத்தினர்.
ஆனால் இலைக்கு எட்டியது கைக்கு எட்டவில்லை என்பதை போல இவர்கள் இணைவதற்கான அறிவிப்பு வெளியாவதற்குள் சசிகலா, தினகரனை கட்சி பதவிகளில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்றும் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஓபிஎஸ் நிபந்தனை விதித்தார்.

இரு அணிகளும் மோதல்
சசிகலாவையும், தினகரனையும் அதிமுக பதவிகளில் இருந்து நீக்கவில்லை, நிபந்தனைகள் நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று ஓபிஎஸ் அணியினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் இரு அணியின் நிர்வாகிகளும் மாறி மாறி பேசியதால் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் அதிமுகவின் அணிகள் இணையாது என்று நினைத்திருந்த வேளையில், அமைச்சர் ஜெயகுமார் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் அணியினரை அழைத்து வருகிறார்.

விமான நிலையத்தில் பேட்டி
டெல்லியில் ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயகுமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுகவில் இரு அணிகள் இணைப்பு விவகாரத்தில், நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். அவர்கள் நாளைக்கே பேச வந்தாலும், நாங்கள் தயார்.

காத்திருக்க முடியாது
ஓபிஎஸ் அணியின் இரு நிபந்தனைகளில் ஒன்றான ஜெயலலிதா மரணம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அந்த தீர்ப்பு வரும் வரை எங்களால் காத்திருக்க முடியாது. மேலும் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அதற்கு முன்னால் எதுவும் செய்யமுடியாது.

அவரவர் விருப்பம்
சசிகலா, தினகரன் ஆகியோர் ஆட்சியிலோ, அதிகாரத்திலோ, கட்சியிலோ தலையிடவில்லை. அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி, அவர்கள் ஆட்சியில் தலையிடுகிறார்கள், அதிகாரத்தில் தலையிடுகிறார்கள் என்று கூறுவார்களேயானால், அதை கவனிக்கத் தயாராக உள்ளோம். சசிகலாவையும், தினகரனையும் சிறையில் சென்று சந்திப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அவ்வாறு சந்திப்பவர்களை நாங்கள் எதுவும் கேட்கவும் முடியாது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications