தமிழகத்தில் உதயசூரியன் உதித்தால்தான் நல்லாட்சி மலரும்: மன்னார்குடி பிரசாரத்தில் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: தமிழகத்தில் உதயசூரியன் உதித்ததால்தான் நல்லாட்சி மலரும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி மேலராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகிலும், வடுவூர் கடை வீதியிலும் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தார்.

We will bring in good governance, Says Karunanidhi

அப்போது, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வழி நடக்கும் திராவிட இயக்கம் திமுக. சூரியன் உதித்தால் உலகுக்கு வெளிச்சம் கிடைக்கும்.

அதுபோல தமிழ்நாட்டில் உதயசூரியன் உதித்தால்தான் நல்லாட்சி மலரும். திராவிட இயக்கத்தின் செல்லப்பிள்ளையாக, எனது நண்பர் மன்னையின் வழித்தோன்றலான டி.ஆர்.பி.ராஜாவுக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்றார் கருணாநிதி.

மன்னார்குடி நகரில் கீழப்பாலம், பந்தலடி தந்தை பெரியார் சிலை பகுதிகளிலும், கூத்தநல்லூரில் இருந்து வடுவூர் வரை ஏராளமான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருணாநிதிக்கு எழுச்சிமிகு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+