எஸ்பிஐ சினிமாஸ் ஒப்பந்த ரத்து ஆவணத்தை பார்த்த பின்னரே முடிவு: விஷால்
சென்னை: எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்த ரத்து ஆவணத்தை பார்த்த பின்னரே தங்களின் முடிவை கூற முடியும் என்றும் நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் கூறியுள்ளார்.
முறைகேடு புகாரால் எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தை ஏற்கனவே ரத்து செய்துவிட்டதாக நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளதை அடுத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் தலைவர் சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதியே ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட ஆவணத்தை முறையாக நடிகர் சங்கத் தலைவரிடம் அளிக்க உள்ளதாகவும் கூறினார். தன் மீதான முறைகேடு புகார்கள் மனதை அதிகம் காயப்படுத்தியதாகவும், அத்தகைய குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் நடிகர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியைச் சேர்ந்த நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். பின்னர் தி.நகரில் உள்ள நடிகர் சங்க நிலத்தை ஆய்வு செய்தனர். அப்போது தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஊடகங்களின் மூலமே தெரிந்து கொண்டதாக கூறினார். எது நடக்க வேண்டும் என்று விரும்பினோமோ அது நடந்துள்ளது. அது மகிழ்ச்சியான விசயம்தான். அதைப்பற்றி ஏன் அவர் எங்களிடம் தெரிவிக்கவில்லை என்ற தெரியவில்லை. ரத்து செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்த்த பின்னரே இதுபற்றி முடிவெடுக்க முடியும் என்றும் கூறினார்.
அதே நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பூச்சி முருகன், தன்னிச்சையாக நடிகர் சங்கம், ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றார். நடிகர் சங்க செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications