For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எச்.ராஜாவிற்கு எதிராக ஆதாரம் இருந்தால் கைது செய்வோம்.. ஓ.பன்னீர்செல்வம்

எச்.ராஜாவிற்கு எதிராக ஆதாரம் எதுவும் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

    சென்னை: எச்.ராஜாவிற்கு எதிராக ஆதாரம் எதுவும் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

    கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கொச்சையாக திட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். ஆனால் இவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

    கைது செய்யப்பட்டார்

    கைது செய்யப்பட்டார்

    அதே சமயம் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேசியதற்காக இன்று காலை கைது செய்யப்பட்டார். அவர் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    இந்த நிலையில் கருணாஸ் கைது குறித்தும், எச்.ராஜா கைது செய்யயப்படாதது குறித்தும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அதில், மற்ற சமுதாயங்களைப் பற்றி கருணாஸ் பேசியது கூறியது தவறு. அவர் கலவரம் ஏற்படுத்தக் கூடிய வகையில் பேசினார்.

    போலீஸ்

    போலீஸ்

    சட்ட ஒழுங்கு கெடும் வகையில் கருணாஸ் பேசினார். அதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலீஸ் அவரை கைது செய்தது சரியானதுதான். போலீஸ் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஆதாரம் இருக்கிறதா

    ஆதாரம் இருக்கிறதா

    எச்.ராஜாவிற்கு எதிராக ஆதாரம் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரம் கிடைத்தால் அவர் கைது செய்யப்படுவார். அரசு சட்ட ஒழுங்கிற்கு எதிராக பேசும் எல்லோர் மீதும் நடவடிக்கை எடுக்கும் என்றுள்ளார்., எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    We will take action against H Raja if we have any evidence says O.Paneerselvam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X