நானே எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பேன்.. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அதிமுக எம்.பி பரபரப்பு!
எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக எம்.பி அருண்மொழிதேவன் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: எச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக எம்.பி அருண்மொழிதேவன் பேட்டி அளித்துள்ளார்.
எச்.ராஜா நீதிமன்றத்திற்கு எதிராகவும், போலீசுக்கு எதிராகவும் பேசி சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார். இவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில், இவருக்கு எதிராக கடலூர் அதிமுக எம்.பி அருண்மொழிதேவன் பேட்டி அளித்துள்ளார். முதல்முறையாக அதிமுகவை சேர்ந்த ஒருவர் எச்.ராஜாவிற்கு எதிராக கடும் கோபத்துடன் பேசுவது இதுவே முதல்முறை.

தமிழகத்தில் மதக்கலவரம்
கடலூர் அதிமுக எம்.பி அருண்மொழிதேவன் பேட்டியில், எச்.ராஜா மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசுகிறார். சர்ச்சைக்கு எல்லாம் எச்.ராஜா என்ன பதில் சொல்ல போகிறார். அரசியல் நாகரீகம் இன்றி அவன் இவன் என்று எச்.ராஜா பேசுகிறார். எச்.ராஜா சில்லறைத்தனமாக அற்பத்தனமாக நடந்து கொள்கிறார்.

நாங்கள் இந்துக்கள்
எச்.ராஜா மட்டும்தான் இந்துக்களை பாதுக்காப்பதாக நடிக்கிறார். எதோ இவர்தான் இந்துக்களுக்கு பிறந்துள்ளதாக கூறியுள்ளார். நாங்கள் என்ன ஆங்கிலேயர்களா?. அதிமுகதான் பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி உள்ளது. இந்து மதத்திற்கு அவர் உரிமை கொண்டாட பார்க்கிறார்.

மனநலம் பாதிப்பு
அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அவரை சாலையில் நடமாடவிட கூடாது. யாரோ வழிப்போக்கர்கள் சொல்லும் கருத்தை எல்லாம் பேசுகிறார். அவர் சுயவிளம்பரம் செய்கிறார், கலவரம் செய்து ஓட்டு வாங்க பார்க்கிறார். அவரின் நடவடிக்கை உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

பெரிய பரபரப்பு
நான் ஒரு குளத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். 100 சதவிகிதம் பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். கோவில் நிலத்தை ஆக்கிரமித்தேன் என்று ராஜா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகுவேன். காவல்துறை அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். இல்லையெனில் நான் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பேன் என்றுள்ளார். கடலூர் அதிமுக எம்.பி அருண்மொழிதேவனின் பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications