விவசாய விளைநிலங்கள் வழியே கெயில் குழாய்கள் பதிப்பதை தடுப்போம்.. வேல்முருகன்
சென்னை: தமிழகத்தில் உள்ள விவசாய விளைநிலங்கள் வழியே கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிப்பதைத் தடுத்து நிறுத்துவோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் விவசாய விளைநிலங்கள் வழியே கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சிக்குரியதாகும்.

தமிழக அரசும் தமிழக எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக விளைநிலங்கள் வழியே கெயில் எரிவாயு குழாய்களை அமைக்கக் கூடாது என திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இதற்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடி தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் உச்சநீதிமன்றம் மூலமாக மத்திய அரசு உத்தரவைப் பெற்றிருப்பது தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியும் துரோகமுமாகும்.
தமிழக மேற்கு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சர்வநாசமாக்கும் இந்த நாசகார எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு சாதகமான தீர்ப்புக்கு எதிராக அரசியலமைப்பு சாசன அமர்விடம் தமிழக அரசு உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும்.
தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில்தான் கெயில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இதனையும் மீறி தீர்ப்புகளைக் காட்டி இத்தகைய படுபாதக கெயில் எரிவாயு குழாய்களை விளைநிலங்கள் வழியே பதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் விவசாய பெருங்குடிமக்களை ஒன்றுதிரட்டி அதைத் தடுக்கும் நடவடிக்கையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இறங்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications