ஸ்டாலினின் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு- 40 தொகுதியிலும் வெல்வோம்: ஜவாஹிருல்லா
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்ததாகவும் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட அரும்பாக்கத்தில் உள்ள குட் ஹோப் மெட்ரிக் பள்ளிக்கூடத்தில் ஜவாஹிருல்லா இன்று வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல மதநல்லிண வரலாறு படைப்போம். மத சார்பற்ற ஆட்சி அமைப்போம் என்ற குறிக்கோளை கவனத்தில் கொண்டு இன்று தமது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.
இந்த தேர்தலில் கின்னஸ் சாதனை போல் இந்தியாவிலேயே வேறுயாரும் செய்யாத வகையில் 92 வயதில் திமுக தலைவர் கலைஞர் எழுச்சிமிகு தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்குகொண்டார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரமும் அமோகமான வரவேற்பை மக்களிடைய குறிப்பாக இளம் வாக்காளர்களிடையயே பெற்று தந்துள்ளது.
வாக்காளர்களை ஈர்பதற்காக கடந்த இரண்டு, மூன்று தினங்களாக அதிமுக செய்துவந்த வித்தைகள் அனைத்தும் மக்களிடம் எடுப்படவில்லை. மக்கள் தெளிவான நன்நம்பிக்கையுடன் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வருகிறார்கள். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி பெரும் வெற்றி அடையும்.
இவ்வாறு அவர் கூறிளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications