தமிழக தே.ஜ.கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதி: வைகோ
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உண்டு. நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் மறுமலர்ச்சி திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
தமிழ் ஈழக்கவிஞர் காசி ஆனந்தன் மதிமுகவைப் பற்றிய பிரச்சாரப் பாடல்களை எழுதியுள்ளார். அதற்கு இசையமைத்துப் பாடியுள்ளார் பிரபல பாடகர் டி.எல்.மகாராஜன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
பாஜக கூட்டணியில் இணையப்போவதாக ஜனவரி 1ம் தேதி இதே இடத்தில் கூறினோம். அதேபோல இணைந்துள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். இந்தியாவெங்கும் மோடி அலைவீசுகிறது. மோடி பிரதமர் ஆவது உறுதி.

தமிழருவி மணியனுக்கு பாராட்டு
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இதற்குக் காரணம் தமிழருவி மணியன் அவர்களின் அயராத முயற்சிதான்.

இந்திய ஐக்கிய நாடு
மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மாநிலங்களுக்கு சமமான உரிமை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘இந்திய ஐக்கிய நாடு,' ‘யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா' என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

மக்கள் ஆதரவு உண்டு
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உண்டு. நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிற கட்சிகளுக்கு வாக்களித்து வீணாக்கி விடாதீர்கள் என்கிறார். இதை அவர் எப்படி கூறமுடியும்?.

வலுவான அணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான அணி. பலமான அணி. ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். எனவே வாக்காளர்கள் தொலை நோக்குப் பார்வையுடன் வாக்களிக்க வேண்டும்.

தமிழர்களை வஞ்சித்த காங்கிரஸ்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழகத்தை அனைத்து வழிகளிலும் வஞ்சித்து விட்டது. முல்லைப்பெரியாறு அணை, காவிரி நதிநீர் பிரச்சினையில் வஞ்சித்து விட்டது. எனவே இம்முறை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும்.

பொது வாக்கெடுப்பு
தமிழீழம் மலர உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications