விருப்பமில்லாத விஜயகாந்தை கட்டாயப்படுத்த மாட்டோம்!- தமிழிசை
சென்னை: தேமுதிக இன்னமும் எங்கள் கூட்டணியில் இருப்பதாகத்தான் நம்புகிறோம். ஆனாலும் விஜயகாந்துக்கு விருப்பமில்லாவிட்டால் அவரைக் கட்டாயப்படுத்தி சேர்க்க மாட்டோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரர்ராஜன் தெரிவித்தார்.
டெல்லியிலிருந்து திரும்பிய தமிழிசை விமான நிலையத்தில் நேற்று இரவு அளித்த பேட்டியில், "தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக கணிசமான வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2014ல் பாஜ தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பாஜ கூட்டணியில் இடம் பெற விரும்பாத கட்சியை நாங்கள் கட்டாயப்படுத்த மாட்டோம். அவர்களுக்கு எங்கள் கூட்டணியில் சேர விருப்பம் இல்லை என்றால் வற்புறுத்த மாட்டோம். தேமுதிக, எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இடம் பெற்றுள்ளது. தற்போதும் அது எங்கள் கூட்டணியில் இருப்பதாகத்தான் நினைக்கிறோம். எனவே தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் தேர்தல் கூட்டணி குறித்து பேசுவோம்.
அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி விஜயகாந்துக்கு நெருக்கடி கொடுக்க மாட்டோம். கூட்டணி என்பது அவர்களுடைய விருப்பம். அது தானாக வர வேண்டும். வற்புறுத்தி வர கூடாது,''என்றார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications