அட போங்க.. மறுபடியும் கருத்து சொல்லி விஜய் படத்தை ஓட வைக்க விரும்பல.. தமிழிசை பேட்டி
நாங்கள் மீண்டும் கருத்து தெரிவித்து விஜய் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: நாங்கள் மீண்டும் கருத்து தெரிவித்து விஜய் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது பெரிய வைரல் ஆகியுள்ளது. அவரது அரசியல் பேச்சு பல அரசியல்வாதிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். நடிகர்கள் திரைக்கு வருவது குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார்.
[லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? ரிபப்ளிக் டிவி சர்வே முடிவை பாருங்க!]

நாங்க ரெடி
அதில், இப்போது எல்லோரும் அரசியல் குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதில் தவறில்லை. போட்டிக்கு வருகிறீர்களா என்று கேட்கிறார்கள். வேண்டுமானால் போட்டிக்கு வாருங்கள். நாங்கள் ரெடியாக உள்ளோம். நீங்க ரெடியா? சொல்லுங்கள்.

அதை ஏற்க முடியாது
சினிமாவும் அரசியலும் வேறு வேறு. அரசியல் களம் எப்படி இருக்கிறது என்று முதலில் தெரிந்துகொள்ளட்டும். சினிமாவில் இருந்து வந்தவர்கள் மட்டும்தான் ஆட்சி அமைக்கிறார்கள் என்று கூறுவது தவறு. முதல்வராக இருந்தவர்களெல்லாம் நடித்தார்கள் என்பது போல் விஜய் பேசி உள்ளார். இதை ஏற்க முடியாது.

அரசியல்வாதிகளின் அறிவு
அரசியல்வாதிகளுக்கு அறிவே இல்லை. அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பது போல இவர்கள் பேசுகிறார்கள். எங்களுக்கும் எல்லாம் தெரியும். தமிழகத்தில் எல்லா அரசியல்வாதிகளும் திறமையானவர்கள்தான். முன்பு சினிமா கேமரா முன்பு பேசினார்கள். இப்போது மீடியா கேமரா முன் விஜய் போன்றவர்கள் பேசுகிறார்கள்.

கமல்ஹாசன்
இப்போதெல்லாம் சினிமா சான்ஸ் கிடைக்கவில்லையென்றால் அரசியலுக்கு வருகிறார்கள். அதுவே சில நாட்களில் சினிமாவில் சான்ஸ் கிடைத்துவிட்டால் அங்கு சென்றுவிட்டு பின் பகுதி நேர அரசியல்வாதியாகி விடுகிறார்கள். கமல்ஹாசன் பகுதிநேர அரசியல்வாதியாகத்தான் இருக்கிறார். அவர் சூழலுக்கு ஏற்றபடி மாறிக்கொள்கிறார்.

நடிகர் விஜய்
தமிழக அரசியல்வாதிகள் எல்லோரும் நல்லது செய்து இருக்கிறார்கள். இதுவரை இருந்த தமிழக முதல்வர்கள் நல்லதே செய்து ஆட்சி நடத்தி உள்ளனர். இனிதான் விஜய் போன்ற ஒருவர் சினிமாவில் இருந்து நல்லது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவரது படம் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் அவரை பற்றி நாங்கள் பேசி, அவரது படத்தை ஓடவைக்க விரும்பவில்லை என்று தமிழிசை கூறியுள்ளார்.

பழைய கதை
ஏற்கனவே இதேபோல் விஜய்க்கு மெர்சல் படத்தில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. ஜிஎஸ்டி தொடங்கி சில மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக பேசியதால் அவருக்கு எதிராக பாஜகவினர் போராடினார்கள். இதனால் தமிழகத்தில் ஹிட் அடிக்க வேண்டிய மெர்சல் இந்தியா முழுக்க வைரலாகி பாக்ஸ் ஆபிசில் சக்கை போடுபோட்டது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications