For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா இல்லாத அதிமுக.. இடையூறு அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. இதுதான் பாஜக திட்டம்

சசிகலா அல்லாத அ.தி.மு.க இருப்பதைத்தான் பா.ஜ.க தலைமையும் விரும்புகிறது. அதற்கு இடையூறாக வலம் வரும் அமைச்சர்களை அப்புறப்படுத்தும் வேலைகளின் ஒரு பகுதிதான், நேற்று நடந்த ரெய்டு.

Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று நடைபெற்ற ஐடி ரெய்டு பின்னணியில்பல காரணங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரெய்டால் சந்தோஷத்தில் இருப்பது என்னவோ சுகாதாரப் பணியாளர்கள்தானாம்.

ஆர்.கே.நகரில் உற்சாகமாக தேர்தல் பணியைத் தொடங்கிய அமைச்சர்கள், அடுத்தடுத்து நடக்கும் ரெய்டுகளால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ' எப்போது வேண்டுமானாலும் ரெய்டு நடக்கலாம் எனத் தகவல் வந்துள்ளது.

இதனால் அமைச்சர்கள் அலர்ட்டாக உள்ளனர். அவர்களால் ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

வரவேற்பு

வரவேற்பு

விஜயபாஸ்கர் மீதான நடவடிக்கைகளை சுகாதாரப் பணியாளர்கள் வரவேற்கின்றனர். காரணம். தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிக்கு மீண்டும் பதவி கொடுத்ததுதான்.

கெட்ட பெயர்

கெட்ட பெயர்

அந்த அதிகாரியால்தான் துறையின் பெயர் ஒட்டுமொத்தமாகக் கெடுகிறது. நேற்று அமைச்சரின் உதவியாளர் நயினார் என்பவரிடம் இருந்து 2.2 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால், அமைச்சரின் முதல்நிலை உதவியாளர் ஒருவரின் பெயர் வெளியில் வரவில்லை.

வில்லங்கம் அறிந்தவர்

வில்லங்கம் அறிந்தவர்

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தமிழக நீதிபதி ஒருவரின் உறவினர் என்று சொல்லிக் கொண்டு அந்த நபர் வலம் வருகிறார். விஜயபாஸ்கரின் அத்தனை வில்லங்கங்களும் அறிந்த நபர் இவர்தான். அவரை நோக்கி வருமான வரித்துறை ரெய்டு நடவடிக்கையும் பாயும் என நம்புகிறோம்" என்றார் விரிவாக.

இடையூறு அமைச்சர்கள்

இடையூறு அமைச்சர்கள்

பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் பா.ஜ.கவுக்கு இணக்கமாக நடந்து கொள்கிறது. சசிகலா அல்லாத அ.தி.மு.க இருப்பதைத்தான் பா.ஜ.க தலைமையும் விரும்புகிறது. அதற்கு இடையூறாக வலம் வரும் அமைச்சர்களை அப்புறப்படுத்தும் வேலைகளின் ஒரு பகுதிதான், நேற்று நடந்த ரெய்டு' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.

English summary
Welfare department officials are happy after IT raids conducted in minister Vijaya Bashkar house, says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X